''திருவனந்தபுரத்தில் தே.ஜ.கூட்டணியின் வெற்றி என்பது மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலையளிக்கும் வகையில் உள்ளது'' என கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர் ஆகிய 4 மாநகராட்சிகளை காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியும், கோழிக்கோடு மாநகராட்சியை இடதுசாரி ஜனநாயக கூட்டணியும், திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் வென்றுள்ளன. இது, என்டிஏ கூட்டணிக்கு திருவனந்தபுரம் மாநகராட்சியில் கிடைத்துள்ள முதல் வெற்றியாகக் கொண்டாடப்படுகிறது.
23
வீணான நம்பிக்கை
கேரள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் 4 மாநகராட்சிகளில் வென்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு இது அமோக வெற்றி என அந்த கட்சியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர், ‘‘திருவனந்தபுரத்தில் தே.ஜ.கூட்டணியின் வெற்றி என்பது மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலையளிக்கும் வகையில் உள்ளது. இந்த முடிவு, வகுப்புவாத சக்திகளிடமிருந்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையும், வகுப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் எல்.டி.எஃப் கேரளா முழுவதும் நல்ல வெற்றி பெறும் எதிர்பார்க்கப்பட்டாலும், ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த முடியவில்லை. எல்.டி.எஃப் மற்றும் யு.டி.எஃப் மேயர் வேட்பாளர்கள் தோற்கிறார்கள்.
33
மக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை
தோல்விக்கான காரணங்கள் விரிவாக ஆராயப்பட்டு, தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, பின்னர் முன்னேறுவோம். தேர்தல் பிரச்சாரத்தில் வகுப்புவாதத்தின் செல்வாக்கு மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் கவலை அளிக்கிறது. இந்தத் தேர்தல் முடிவு, வகுப்புவாத சக்திகளின் தீய பிரச்சாரம், தந்திரங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கையாகும். இந்த முடிவு, அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை அதிக வீரியத்துடன் தொடர வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இடது ஜனநாயக முன்னணி வரும் நாட்களில் அனைத்து விஷயங்களையும் விரிவாக ஆராய்ந்து மக்களின் முழு ஆதரவைப் பெற்று முன்னேற ஆலோசனை செய்யப்படும். இடது ஜனநாயக முன்னணியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தவும், அரசாங்கத்தின் வளர்ச்சி, நலத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவை அதிகரிக்கவும் உறுதியுடன் செயல்படுவோம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.