பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள் தானா? நிபந்தனையோடு இபிஎஸிடம் இறங்கி வந்த அமித் ஷா..!

Published : Dec 19, 2025, 02:48 PM IST

பாஜகவுக்கு 30 தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என தெரிவிக்க, அதற்கு அமித் ஷா தரப்பு  30 தொகுதிகளில் 25 தொகுதிகள் நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்க வேண்டும். மீதமுள்ள ஐந்து நீங்கள் கொடுக்கும் தொகுதியை பெற்றுக் கொள்கிறோம் என தெரிவித்திருக்கிறது.

PREV
14

தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வரும் 2026 மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதம் வாக்குப்பதிவு, மே மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் அதே கூட்டணியில் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. புதிய தொடங்கியுள்ள தவெகவுடன் கூட்டணிக்கு இதுவரை யாரும் செல்லவில்லை. கடைசி வரை தனியாகத்தான் கூட்டணியில்லாமல் விஜய் போட்டியிடும் சூழல் உருவாகும் என்கிறார்கள். இந்த நிலையில் திமுகவுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் வேளையில் மிக தீவிரம் காட்டி வருகிறது டெல்லி பாஜக தலைமை. இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக அமித்ஷா தரப்பில் இருந்து பேசப்பட்டிருக்கிறது.

24

அதில் அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிடும். மீதம் உள்ள 64 தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என எடப்பாடி தெரிவித்திருக்கிறார். ஆனால், அதற்கு அமித் ஷா தரப்பு 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும். மீதஉள்ள 84 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடட்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதாவது பாஜகவுக்கு 40 தொகுதிகள், பாமகவுக்கு 15 தொகுதிகள், தேமுதிக 10, டிடிவி தினகரன் 8 தொகுதிகள், மீதமுள்ள தொகுதிகள் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும். இப்படி தொகுதிகள் ஒதுக்கினால் மட்டுமே மற்ற கூட்டணி கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர முடியும் என எடப்பாடி பழனிச்சாமியிடம் அமித் ஷா தரப்பு வலியுறுத்தி இருக்கிறது. ஆனால் இதற்கு எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுக்கு 40 தொகுதி கொடுக்க முன்வரவில்லை.

34

தொகுதிகளை குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அப்போது பாஜகவுக்கு 30 தொகுதிகள் தான் கொடுக்க முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க, அதற்கு அமித் ஷா தரப்பு அப்படியானால் 30 தொகுதிகளில் 25 தொகுதிகள் நாங்கள் கேட்கும் தொகுதியை கொடுக்க வேண்டும். மீதமுள்ள ஐந்து நீங்கள் கொடுக்கும் தொகுதியை பெற்றுக் கொள்கிறோம் என  தெரிவித்திருக்கிறது. இல்லையென்றால் பாஜகவுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கினால் பாதிக்கு பாதி என்கிற விகிதத்தில் 20 தொகுதிகள் பாஜக கேட்கும் தொகுதிகளை கொடுக்க வேண்டும். 20 தொகுதிகள் நீங்கள் கொடுக்கும் தொகுதியில் பாஜக போட்டியிடும் என அமித் ஷா தரப்பு எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் இறுதியாக அதிமுக 160 தொகுதிகள் போட்டியிடும் என்றும், பாஜக 30 தொகுதிகளிலும், மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

44

பாஜக போட்டியிட இருக்கும் 30 தொகுதிகளில் 25 தொகுதிகள் பாஜக கேட்கும் தொகுதிகளை எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கொடுக்க வேண்டும் என்கிற அமித் ஷாவின் நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்புள்ள 25 தொகுதிகள் அடங்கிய பட்டியலும் அவரது கைக்கு சென்று இருக்கிறது. அதில், கொங்கு மண்டலம், தென் மாவட்டத்தில் அதிக தொகுதிகள் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்தந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் 90% தயாராகி விட்டதாக பாஜக வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Read more Photos on
click me!

Recommended Stories