கொடி கம்பம் காரின் டோர் மற்றும் பாடி பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இன்னோவா காரின் வலுவான ஹை-ஸ்ட்ரெங்த் ஸ்டீல்லால் முழுமையாக சேதாரம் ஏற்படவில்லை என்றாலும் அதனை சரிசெய்ய ஏழு லட்சங்கள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டது. விபத்தில் சிக்கிய TN 64 D 0005 என்கிற பதிவு எண் கொண்ட அந்த காரின் இன்சூரன்ஸ் 2026 வரை இருந்தாலும் 15 வருடம் 4 மாதங்களான பழைய கார் அது. 15 ஆண்டுகளுக்கு மேல் சென்றால் வண்டியை புதுப்பித்து ஆர்டிஓ அலுவலகத்தில் சென்று எஃப்சி எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்ஷுரன்ஸே இருந்தாலும் எந்த கிளைம் செய்ய முடியாது. காயலான் கடையில் எடைக்கு மட்டுமே போடப்படும் நிலையில்தான் இருந்தது.
ஆனாலும் மாநாட்டின் போது விஜய் இதை அறிந்து, காரின் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு புத்தம் புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக தரப்பில் கூறப்பட்டது. பழைய காருக்கு பதில் புதிய காரா? என பலர் விஜயை பாராட்டினர். ஆனால் மாநாடு நடந்து ஒரு மாதம் ஆன பிறகும் இன்னும் உதவி செய்யவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.