அதிமுக–டிடிவி டீல்.! 7 பொதுத்தொகுதி, 2 தனித்தொகுதி.! மொத்தம் 9 இடங்கள் ஒதுக்கீடு.?

Published : Mar 11, 2026, 08:55 AM IST

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்துள்ளது. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, அமமுகவுக்கு 9 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
15
அதிமுக கூட்டணியில் டிடிவி தினகரன் கட்சிக்கு 9 சீட்

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரம் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இணைந்துள்ள நிலையில், டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் (அமமுக) இந்த அணியில் உள்ளது இணைந்து செயல்படுகிறது. இந்த கூட்டணியில் அமமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகள் குறித்த முக்கிய தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் வெளியாகியுள்ளன.

25
அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணியில் முன்பு எதிரணியாக இருந்த டிடிவி தினகரனின் கட்சியும் தற்போது இணைந்துள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது என்றுதான் சொல்ல வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து தற்போது திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

35
9 தொகுதி பட்டியல்

இந்த நிலையில் முதலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 13 சட்டசபை தொகுதிகளை கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அந்த கோரிக்கையை முழுமையாக ஏற்கவில்லை. நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அமமுகவுக்கு 9 சட்டசபை தொகுதிகள் வழங்குவதற்கு அதிமுக தரப்பு சம்மதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
அமமுகக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்

இதற்கிடையில் திருச்சியில் நடைபெறும் என்டிஏ கூட்டணி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதிமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பின்னர் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதி விவரங்கள் தெளிவாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

55
டிடிவி தினகரன் போட்டியிடும் தொகுதி

அமமுகவுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படும் தொகுதிகளில் ராணிப்பேட்டை மாவட்டம் சோழிங்கர், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் (தனி), திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, புதுக்கோட்டை, தர்மபுரி மாவட்டம் அரூர் (தனி), மதுரை மாவட்டம் மேலூர், தஞ்சை மாவட்டம் பாபநாசம் திருச்சி மாவட்டம் முசிறி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் டிடிவி தினகரன் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. மேலும் பாஜக 60 தொகுதிகளை கேட்ட நிலையில், அதற்கு பதிலாக சுமார் 29 தொகுதிகள் வழங்க அதிமுக தரப்பு முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories