சி.பி.ராதாகிருஷ்ணன், குஷ்புவை தொடர்ந்து நாராயணன் திருப்பதி புதிய பதவி..!

First Published | Mar 10, 2023, 1:05 PM IST

சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஊரக மின்வசதியாக்க பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

தமிழக பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகளை மத்திய அரசு அவ்வப்போது வழங்கி வருகிறது. அதன்படி எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியும், தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டது. சமீபத்தில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

இந்நிலையில்,  சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிக்கு ஊரக மின்வசதியாக்க பொதுத்துறை நிறுவனத்தின் REC ltd இயக்குநர் பதவி வழங்கப்பட்டது. 

Tap to resize

இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பொது துறை நிறுவனமான @RECLindia நிறுவனத்தின் இயக்குனராக புது டெல்லியில் பொறுப்பேற்று கொண்டேன். அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 

பிரதமர் மோடி, பாஜக தேதிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அமைப்பு பொது செயலாளர் பி.எல்.சந்தோஷ் அவர்கள் ஆசி வேண்டுகிறேன். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் அவர்களுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!