பஸ்ல ஏதாவது பிரச்சனையா! இந்த நெம்பருக்கு ஒரே ஒரு போன் போடுங்க! மத்தத நாங்க பாத்துக்குறோம்! அமைச்சர் சிவசங்கர்

Published : Mar 10, 2023, 09:58 AM ISTUpdated : Mar 10, 2023, 08:21 PM IST

அரசு பேருந்து பயணிகளின் குறைகளை தீர்ப்பதற்கான இலவச உதவி எண் மற்றும் அரசு பேருந்து இருக்கும் இருப்பிடத்தை அறியும் இணையதளம் ஆகியவற்றை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

PREV
15
பஸ்ல ஏதாவது பிரச்சனையா! இந்த நெம்பருக்கு ஒரே ஒரு போன் போடுங்க! மத்தத நாங்க பாத்துக்குறோம்! அமைச்சர் சிவசங்கர்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இருப்பினும், அரசு பேருந்துகளில் சிக்கல்கள் தொடர்பாக புகார் அளிக்கக் கூட எந்தவொரு வழியும் இல்லை என்றும் மக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், போக்குவரத்துறை அமைச்சர் சிவங்கர் சட்டமன்றத்தில் அறிவித்த படியே முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளார். 

அரசு பேருந்தில் பிரச்சனையா? - ஒரே ஒரு கால் பண்ணுங்க! #govtbus
 

25

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில், பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய பல முயற்சிகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளைக் கண்டறியவும், அவர்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கவும், ஒருங்கிணைந்த பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி மையம் அமைக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள்.

அரசு பேருந்தில் பிரச்சனையா? - ஒரே ஒரு கால் பண்ணுங்க! #govtbus
 

35

உதவி மையத்தைத் தொடர்பு கொள்வதற்கான இலவச எண் 1800 599 1500 அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதனால் பயணிகளுக்கு அழைப்புக் கட்டணம் எதுவும் இல்லை. பயணம் செய்யும் பயணிகள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்கள், குறைகள் மற்றும் தகவல்களையும் பெறலாம். பயணிகள் மற்றும் பொது மக்களிடமிருந்து அழைப்புகளைப் பெறுவதற்கான வசதி பல்லவன் இல்லத்தில் உள்ள மாநகர போக்குவரத்து கழக தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகள் பிரத்யேக அடையாள எண் ஒதுக்கப்பட்டு, பதிவு செய்யப்பட்டு, பின்னர் ஒப்புகை குறுந்தகவல் பயணிகளுக்கு அனுப்பப்படும். பெறப்பட்ட புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் உடனுக்குடன் கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசு பேருந்தில் பிரச்சனையா? - ஒரே ஒரு கால் பண்ணுங்க! #govtbus
 

45

பயணிகள் மற்றும் பொதுமக்கள், பேருந்துகளின் தூய்மை, தாமதமாக இயக்குதல், பேருந்து பழுதடைதல், பேருந்து நிலையங்களில் உரிய பேருந்துகள் இல்லை, பேருந்து நிலையங்களில் அதிக நேரம் காத்திருப்பது, பேருந்து நிறுத்தங்களில் அதிக நேரம் காத்திருப்பது, ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தங்களைத் தவிர்ப்பது, பயணிகளின் பொருட்கள் தொலைந்து போவது, பேருந்துகளில் பணியாளர்கள் தவறான நடத்தை, சக பயணிகளால் துன்புறுத்தல், பேருந்துகளை மோசமாகப் பராமரித்தல், விபத்துகள், வெள்ளம், கலவரங்கள் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். பேருந்து இயக்கம் தொடர்பான விசாரணை, பண்டிகைக் கால சிறப்பு பேருந்து இயக்கம் போன்ற தகவல்களையும் பெறலாம். விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்த எச்சரிக்கை செய்திகளை பணியாளர்கள் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் புகார் மற்றும் குறைகளை தங்கள் தொலைபேசியிலிருந்து கூகுள் குரல் உதவி வழியாக மேற்கண்ட இலவச எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அரசு பேருந்தில் பிரச்சனையா? - ஒரே ஒரு கால் பண்ணுங்க! #govtbus
 

55

பெறப்படும் புகார்கள் மற்றும் குறைகளை அந்தந்த போக்குவரத்து கழகங்கள் கண்காணிக்கலாம். புகார்கள் மற்றும் குறைகள் தீர்க்கப்பட்ட பிறகு, புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பயணிகளுக்கு மீண்டும் குறுந்தகவல் தெரிவிக்கப்படும். இத்திட்டத்தின் செயல்பாட்டைக் கண்காணிக்க தேவையான நபர்கள் புகார் மையத்திலும் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களிலும் ஈடுபடுத்தப்படுவார்கள். தினசரி வாராந்திர, மாத அடிப்படையிலான மற்றும் குறிப்பிட்ட காலத்திற்கு போக்குவரத்து கழக வாரியான புகார் மற்றும் குறைகள் குறித்த விவரங்கள் பற்றிய அறிக்கைகள் வழியாக போக்குவரத்துக் கழகங்களின் மேலாளர்கள், பயணிகளின் புகார்கள் குறைகள் மீது கவனம் செலுத்தி, பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பேருந்து சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதனால் பேருந்து இயக்கத்தில் பயணிகளின் திருப்தியை மேலும் அதிகரிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு பேருந்தில் பிரச்சனையா? - ஒரே ஒரு கால் பண்ணுங்க! #govtbus
 

Read more Photos on
click me!

Recommended Stories