அந்த வகையில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பின் மகேஷ் பொய்யா மொழி, சேகர்பாபு, தங்கம் தென்னரசு, மூர்த்தி, கீதா ஜீவன் உள்ளிட்டோர் எளிதாக வெற்றி பெற்று வருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், பெரிய கருப்பன், ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், மஸ்தான் போன்றோர் தோல்வியடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதன் அடிப்படையில் பெரும்பாலான அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது எனக் கூறப்படுகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் சிபாரிசு அடிப்படையில் தொகுதி ஒதுக்கப்படக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
உளவுத்துறை தயாரித்து வரும் ரிப்போர்ட் அடிப்படையில் மட்டுமே வேட்பாளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறார். எனவே வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் யாரை தேர்வு செய்தாலும், அவர் குறித்து உளவுத்துறை தரும் தகவல் அடிப்படையில் மட்டுமே தொகுதி ஒதுக்க வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். எனவே பணம் செலவு செய்தோ, சிபாரிசின் பெயரிலோ இந்த முறை கட்சி பிரமுகர்கள் வேட்பாளர்களாக தகுதி பெற முடியாது.