விஜய் தலைமையிலான மூன்றாவது கூட்டணி கிட்டத்தட்ட இறுதி நிலையை எட்டி இருக்கிறது. தவெகவுடன் காங்கிரஸ் கட்சி, தேமுதிக, டிடிவி.தினகரன், ஓபிஎஸ், காளியம்மாள் போன்றோர் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்த கூட்டணி திரை மறைவில் இறுதி செய்யப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
தவெக தனித்து போட்டியிடும் என ஆரம்ப கட்டத்தில் பேசப்பட்டு வந்தநிலையில் இப்போது பலமான மூணாவது கூட்டணி அமைப்பதால் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுக்கும் தவெக மிகப்பெரிய சவால் விடும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகராக வலம்வந்த நடிகர் விஜய் திடீரென சினிமாவுக்கு முழுக்க போட்ட நிலையில், புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். தவெக கட்சியை தொடங்கி நிறைய போராட்டங்கள், சர்ச்சைகள், பிரச்சனைகளுக்கு மத்தியில் தொடர்ந்து விடாப்பிடியாக களப்பணியாற்றி வருகின்றனர். ஆரம்பத்தில் தனியாவே போட்டியிடலாம் என முடிவு எடுத்திருந்தது தவெக. அக்கட்சியின் நிர்வாகி நிர்மல் குமார் செய்தியாளர்கிட்ட பேசும்போது, ‘‘திமுக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளைத் தவிர யார் வேண்டுமானாலும் தவெகவுடன் இணையலாம் என தெரிவித்து இருந்தார்.