விவசாயத்தையும், ஈரோட்டின் பெருமையையும் பற்றி பேசிய விஜய், நம்ம வீட்ல கூட நம்ம அம்மா, அக்கா, தங்கைகள் நமக்காக நாம நல்லா இருக்கணும்னு மஞ்சள் புடவை கட்டிக்கிட்டுதான் வேண்டிக் கொள்வார்கள். அப்படி அந்த மஞ்சள் என்றாலே ஒரு தனி மகி்மைதான். நம்ம கொடியில் கூட அந்த மஞ்சள் பிரண்டா, அந்த எனர்ஜெடிக்கா மஞ்சள் இருக்குமே. அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளைகிற பூமி தான் இந்த ஈரோடு. இங்கே வந்து மஞ்சள் பற்றி பேசாமல் வேற எங்க போய் பேசுறது? அது மட்டும் இல்ல. ஒரு மகத்தான ஒரு மனிதரைப் பற்றி நாம பேசியே ஆகணும். தந்தை பெரியார்.
இந்த ஈரோடு மண் விவசாயத்துக்கும் பேர் போன மண். இங்கு நடக்கிற அந்த விவசாயத்துக்கு மிக முக்கியமான ஒரு கவசமாக இருக்கிறது என்ன தெரியுமா? காலிங்கராய அணை. நம் உயிரான, உணர்வான அந்த அணை கட்டும் போதும் கால்வாய் வெட்டும்போது, ரொம்ப சோர்வடைந்து விட்டாராம் காலிங்கராயன். அப்ப அவங்க அம்மா அதைப் பார்த்துவிட்டு சொன்னாங்களாம் மகனே... காலிங்கராயா, தயிர் விற்ற காசு இருக்குது. அதை எடுத்துக்கொண்டு போய் அணையை கட்டிடு. கால்வாயை வெட்டுனு சொல்லி தைரியம் கொடுத்தாங்களாம். பெத்த அம்மா குடுக்குற அந்த தைரியம் இருக்கு பாருங்க அதைத்தாண்டி வேற எதுவுமே கிடையாது. எல்லாரும் எனக்கு தைரியம் கொடுத்து இருக்கீங்க. அதே தைரியத்தை கொடுத்து இருக்கீங்க. அதே துணையாக என் கூட நிக்கிறீங்க. இதை எப்படி நம்மை பிரித்து விடலாம். இதை எப்படி நம்ம கெடுக்கலாம் என அவதூறுகள் கிளப்புகிறார்கள்.