லீக்கான திமுக-அதிமுக மோதும் வேட்பாளர் பட்டியல்..! இறுதியான 30 தொகுதிகள்..! யாருக்கு எந்தெந்த தொகுதி..?

Published : Jan 09, 2026, 02:19 PM IST

அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட தங்கள் வேட்பாளர்கள் யார் யார் என்பதை தனி தனி குழுக்கள் அமைத்து கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டார்கள். வேட்பாளர்கள் நேர்காணல் என்பது ஒரு வகையான கண்துடைப்பு என்பது அனைவரும் அறிந்தது தான்.

PREV
15

திமுக, அதிமுக தரப்பில் மோதிக்கொள்ளப்போகும் தொகுதிகள் பட்டியல் விவரம் வெளியே கசிந்துள்ளது. கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் அதிமுக தரப்பில் போட்டியிட போகும் இறுதி வேட்பாளர் பட்டியல் தயாராகி இருக்கிறது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தமிழக வெற்றி கழக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி உருவாகி உள்ளது. அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட தங்கள் வேட்பாளர்கள் யார் யார் என்பதை தனி தனி குழுக்கள் அமைத்து கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டார்கள். வேட்பாளர்கள் நேர்காணல் என்பது ஒரு வகையான கண்துடைப்பு என்பது அனைவரும் அறிந்தது தான். அந்த வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் பட்டியல் தயாராகி இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் யார் யார் என்ற உறுதியான தகவல் வெளியே கசிந்து இருக்கிறது.

25

முதல் கட்டமாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்குகிறார். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இருந்தபோதும் இந்த வேறொருவருக்கு விட்டுக்கொடுத்து அவர் தொகுதி மாறலாம் என்றும் கூறப்படுகிறது. அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி கடந்த முறை எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டார். இந்தமுறை அவர் தொகுதி மாற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆர்.கே.நகர் தொகுதியிலும், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீண்டும் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சர் எ.வ.வேலு திருவண்ணாமலையிலும், தங்கம் தென்னரசு திருச்சுழி தொகுதியில் போட்டியிடுகிறார். செந்தில் பாலாஜி, கோவை களமிறங்கலாம் என முதலில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டு அவர் மீண்டும் கரூர் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். ஐ.பெரியசாமி திண்டுக்கல் தொகுதியிலும், கோவி செழியன் தஞ்சாவூர் தொகுதியிலும் பெரிய கருப்பன், திருப்பத்தூர் தொகுதியிலும், போட்டியிடுகிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநில அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கும் சூழ்நிலைகள் தூத்துக்குடி தொகுதி கனிமொழிக்கு ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

35

ராதாதபுரம் தொகுதியில் அப்பாவு போட்டிருக்கிறார். முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த வகையில் அவருக்கு ஆலங்குளம் தொகுதி ஒதுக்கப்படுகிறது. இதேபோல் அதிமுக தரப்பிலும் உறுதியான வேட்பாளர் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. முதல்கட்டமாக முன்னாள் அமைச்சர் கோகுல் இந்திராவுக்கு அண்ணா நகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறிய இவருக்கு மீண்டும் அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதி ஒதுக்கப்படுகிறது. கே.பி.முனுசாமி வேப்பனஹல்லி தொகுதிகளிலும், செம்மலை ஓமலூர் தொகுதிகளில் போட்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கை நட்சத்திரமான எஸ்.பி.வேலுமணி மீண்டும் தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நத்தம் விஸ்வநாதனுக்கு மீண்டும் நத்தம் தொகுதி ஒதுக்கப்படுகிறது. செந்தில் பாலாஜி எதிர்த்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் போட்டியிடுகிறார் மயிலாடுதுறையில் கோமல் அன்பரசன் போட்டியிடுகிறார். இவர் முன்னதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டவர். தற்பொழுது அதிமுக சார்பில் வாய்ப்பு தரப்படுகிறது. ராஜபாளையம் தொகுதியில் நடிகை கௌதமி போட்டியிடுருகிறார். ஆ.பி.உதயகுமார் மீண்டும் திருமங்கலம் தொகுதியில் போட்டிருக்கிறார். ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடுகிறார். ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் தொகுதிகள் போட்டியிடுகிறார்.

45

கோவில்பட்டி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கி தரலாம் என எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து இருக்கிறார். ஆனால் அந்த தொகுதியில் செல்வாக்கு பெற்ற கடம்பூர் ராஜு விடாப்படியாக பேசி கோவில்பட்டி தொகுதியில் தான் போட்டியிடுவேன் என உறுதியாக தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில் கடம்பூர் ராஜூவுக்கு கோவில்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையாவுக்கும், கடையநல்லூர் தொகுதி கிருஷ்ணா முரளிக்கும் ஒதுக்கப்படுகிறது. கடையநல்லூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தரப்பில் அந்த தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்படும். அங்கு ராஜேந்திரன் களமிறங்க உள்ளார்.

அதே சமயம் கடையநல்லூர் தொகுதியை எங்களுக்கு ஒதுக்க தர வேண்டுமென்றால் முஸ்லிம் லீக் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏற்கனவே கடையநல்லூர் தொகுதியில் குழப்பமான சூழ்நிலையில் இருக்கிறது. சங்கரன்கோவில் தொகுதியை பொருத்தவரையில் தற்பொழுது சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ராஜாவுக்கு மீண்டும் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அதேவேளை அதிமுகவை பொறுத்தவரையில் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமிக்கு வாய்ப்பு தரப்படும் என தெரிகிறது. முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி, எடப்பாடி பழனிச்சாமி உடன் நெருக்கமான தொடர்பு உள்ளவர். அதிமுக தரப்பில் பல பிரம்மாண்டமான கூட்டங்களை நடத்தி கட்சி தலைமையை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

55

தென்காசி தொகுதியை பொருத்தவரை பாஜகவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அந்த வகையில் சரத்குமார் தென்காசி தொகுதிகள் போட்டியிடலாம் என தெரிய வந்திருக்கிறது. திமுகவின் அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மகன் கலை கதிரவன் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இதேபோல் பாஜவை பொறுத்தவரை முன்னாள் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவையிலும், நைனார் திருநெல்வேலி தொகுதியிலும், விஜயதரணி விளவங்கோடு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தை பொருத்தவரை கொங்கு மண்டலத்தில் ஏதாவது ஒரு தொகுதிகள் செங்கோட்டையன் போட்டியிடுவதற்கும், கடலூர் தொகுதியில் தமிழக வெற்றி கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் போட்டியிடுவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories