பெங்களூரு சாலை குப்பைகளை பார்த்து காரித்துப்பிய வெளிநாட்டு முதலீட்டாளர்..! கதறும் கிரண் மஜும்தார் ஷா

Published : Oct 14, 2025, 10:38 AM IST

சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன. ஏன் இவ்வளவு குப்பைகள் உள்ளன? அரசு முதலீட்டை விரும்பவில்லையா? நான் இப்போதுதான் சீனாவில் இருந்து வந்திருக்கிறேன். சுற்றுச்சூழல் சாதகமாக இருக்கும்போது இந்தியா ஏன் அதன் செயல்பாட்டை ஒருங்கிணைக்க முடியாது என புரியவில்லை?

PREV
14
டாப் ஒன் பெண் தொழிலதிபர் கிரண்

பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார் ஷா சமீபத்தில் பெங்களூருவில் உள்ள தனது பயோகான் பூங்கா அலுவலகத்தில் ஒரு வெளிநாட்டு பிசினஸ் நபர் கூறிய ஒரு சங்கடமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வெளிநாட்டு பிஸினஸ் நபர் பெங்களூருவின் மோசமான சாலைகள், திறந்தவெளி குப்பைகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இது சீனாவின் உள்கட்டமைப்பு தரநிலைகளுடன் ஒப்பிடப்படுகிறது.

இந்தியாவின் முதல் டாப் ஒன் பெண் தொழிலதிபர் கிரண். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் பெங்களூருவில் பயோகன் நிறுவனத்தை 30 வருடங்களுக்கு முன்பு தொடங்கி இந்தியாவின் நம்பர் ஒன் பெண் தொழிலதிபர் என்ற பட்டத்தை பெற்றவர்.

24
ஏன் இவ்வளவு குப்பைகள் உள்ளன?

இந்நிலையில் தொழிலதிபர் கிரண் மஜூம்தார் ஷா தனது எக்ஸ்தளத்தில், ‘‘பயோகான் பூங்காவிற்கு ஒரு வெளிநாட்டு பிஸினஸ் நபர் என்னிடம், 'சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன. ஏன் இவ்வளவு குப்பைகள் உள்ளன? அரசு முதலீட்டை விரும்பவில்லையா? நான் இப்போதுதான் சீனாவில் இருந்து வந்திருக்கிறேன். குறிப்பாக சுற்றுச்சூழல் சாதகமாக இருக்கும்போது இந்தியா ஏன் அதன் செயல்பாட்டை ஒருங்கிணைக்க முடியாது என்பதுபுரியவில்லை?’’ பதிவிட்டுள்ளார். அதில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பிரியங்க் கார்கே உள்ளிட்ட மாநிலத் தலைவர்களை டேக் செய்துள்ளார்.

34
இடம் மாறும் தொழில் நிறுவனங்கள்

வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக அரசு "மிஷன் ஃப்ரீ டிராஃபிக்-2026" ஐத் தொடங்கியுள்ளது.இது பெங்களூருவின் 1,600 கி.மீ சாலைகளை பழுதுபார்த்து மறுசீரமைப்பதை இலக்காகக் கொண்ட 90 நாள் முயற்சியாகும். இந்தத் திட்டத்தில் பள்ளங்களை நிரப்புதல், சாலை மேம்பாடு, பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள், சாலைகள், தூய்மையைப் பராமரிக்க தனியார் துறை ஈடுபாடு ஆகியவையும் அடங்கும். இந்தத் திட்டம் மார்ச் 2026 க்குள் போக்குவரத்து ஓட்டம், உள்கட்டமைப்பு தரத்தை மேம்படுத்தும்’’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், லாஜிஸ்டிக்ஸ் ஸ்டார்ட்அப் பிளாக்பக்கின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் யபாஜி, ‘‘மோசமான சாலை நிலைமைகள் காரணமாக பெங்களூருவின் அவுட்டர் ரிங் ரோட்டில் இருந்து இடமாற்றம் செய்கிறோம்’’ என அறிவித்தார். இன்போசிஸின் முன்னாள் செயல் அதிகாரி மோகன்தாஸ் பாய் இந்த நிலைமையை ‘ஆட்சியின் பெரிய தோல்வி’ என கடுமையாக விமர்சித்தார். இது மாநில அதிகாரிகளை கடுமையாக சங்கடப்படுத்தியது.

44
பயணத்தை மோசமாக்கும் சாலைகள்

அவுட்டர் ரிங் ரோடு உட்பட சில முக்கிய பகுதிகளில் நடந்து வரும் மெட்ரோ கட்டுமானம் போக்குவரத்து நெரிசலை அதிகரிக்கிறது. ஏஐ- மூலம் இயங்கும் கேமராக்கள் இப்போது போக்குவரத்து விதிகளை அமல்படுத்துகின்றன. ஆனால் சட்டவிரோத பார்க்கிங், ஒன்வே மீறல்கள் பயணிகளின்பயணத்தை தாமதப்படுத்தி மேலும் மோசமாக்குகின்றன. சாலை, வடிகால், மேம்பாலம் பழுதுபார்ப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க ஐடி பூங்காக்களை தற்காலிகமாக மூடுமாறு தொழில்நுட்ப ஊழியர்களும், குடியிருப்பாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories