நடிகர் விஜய்யை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதா.! பாஜக பெண் நிர்வாகிக்கு எதிராக சீறும் கஸ்தூரி

First Published | Jun 21, 2023, 9:37 AM IST

திமுக மற்றும் நடிகர் விஜய்யை தரம் தாழ்த்தி விமர்சித்து சமூக வலை தளத்தில் பதிவிட்ட பாஜக ஆதரவாளர் உமா கார்க்கியை போலீசார் கைது செய்த நிலையில், நடிகர் விஜய்யை  மிக தரம் தாழ்ந்து ஏசியது ஏற்கமுடியாத குற்றம். அதை செய்தது பெண் என்பது அதிர்ச்சி என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
 

பாஜக ஆதரவாளர் கைது

கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். இவர் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் உமா கார்க்கி  என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். இவர் தனது சமூக வலைதளத்தில் திமுக தலைவர்கள், பெரியார் உள்ளிட்டவர்களை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.  இந்துக்களுக்கு மட்டும் ஓட்டு இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு ஓட்டுரிமை ரத்து செய்ய வேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துகளை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நடிகர் விஜயை அவரது மதத்தை வைத்து கடுமையாக உமா கார்க்கி விமர்சித்துள்ளார். 

நடிகர் விஜய் மீது அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர்.! உமா கார்க்கியை தட்டி தூக்கிய கோவை சைபர் கிரைம் போலீஸ்

விருது வழங்கி பாராட்டிய அண்ணாமலை

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உமா கார்க்கி மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக ஆதரவாளரான உமா கார்க்கியை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உமா கார்க்கி நேற்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு முதல் நாள்  பாஜக சார்பில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர் சந்திப்பு  கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு  உமா கார்கிக்கு சிறந்த செயல்பாட்டாளர் என விருது வழங்கி பாராட்டியிருந்தார். இந்தநிலையில் உமா கார்க்கிதொடர்பாக நடிகை கஸ்தூரி தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Tap to resize

நடிகை கஸ்தூரி கண்டனம்

அதில், விமர்சனம் வேறு , தனி மனித தாக்குதல் வேறு. ஈவேராவை விமர்சிக்கும் வேகத்தில் நடிகர் விஜய்யை  மிக தரம் தாழ்ந்து ஏசியது ஏற்கமுடியாத குற்றம். அதை செய்தது பெண் என்பது அதிர்ச்சி.  உமா கார்க்கிபொதுவாகவே வன்மையாக பதிவிடுகிறார் . இத்தனை நாள் தப்பித்ததே ஆச்சரியம் என தெரிவித்துள்ளார்.  நியாயப்படி பார்த்தால் தமிழக பாஜக உமா கார்க்கியை முன்னமேயே கண்டித்திருக்க வேண்டும். உமா கார்க்கி இப்போது  தளபதி விஜய் மற்றும் அவர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து போலீஸ் புகாரை வாப‌ஸ் வாங்க வேண்டலாம் என கஸ்தூரி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலையிடம் விருது வாங்கிய உமா கார்க்கி..! அடுத்த நாளே கைது செய்த போலீஸ்- காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக

Latest Videos

click me!