10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.
மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் மேடையில் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்த விஜய், இந்நிகழ்வில் பல விஷயங்கள் குறித்தும் பேசினார்.காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் நிகழ்வு இரவு 10 மணியை தாண்டி நடைபெற்றது. 10 மணிநேரத்துக்கு மேல் நடிகர் விஜய் மேடையில் நின்றுகொண்டிருந்தார்.
மேலும் ஒவ்வொரு மாணவருக்கும் தன் கையால் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பொன்னாடை போர்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். நடிகர் விஜயின் பேச்சு, நடவடிக்கை எல்லாம் அவர் விரைவில் அரசியலுக்கு வர உள்ளாரோ? என்ற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. நடிகர் விஜயின் இந்த கல்வி விருது விழா பற்றியும், அவரது பேச்சு பற்றியும் பல்வேறு அரசியல் தலைவர்களும் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.