குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அசாமில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் தீயாய் பரவி வருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் தொடர்ந்து 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ஐ.ஐ.டி., லயோலா, நியூ காலேஜ் உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை முதல் ஆளாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சந்தித்தார். அதன் புகைப்பட தொகுப்பு இதோ...