"எங்களுக்கு தவெகவின் மீதுதான் காதல். ஆனால் கல்யாணம் செய்துகொண்டது திமுகவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னார்” தவெகவின் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ‘‘மாற்றத்திற்கான அரசியல், மாற்று அரசியலுக்கான தேவை தமிழ்நாட்டில் இருக்கிறது. அதை இட்டு நிரப்ப வந்தவர்கள் எல்லாம் தோற்றார்கள் தொலைந்தார்கள். அதை இட்டு நிரப்புவதற்கு மட்டுமல்ல, அதிகாரத்தினுடைய நிழல் படியாத ஒரு கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் தமிழ்நாட்டில் நாளைக்கு அதிகாரத்திற்கு வருகிறது என்கிற நம்பிக்கை நாட்டு மக்கள் மத்தியிலே இன்றைக்கு நெஞ்சில் உதயமாக இருக்கிறது. இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அரசியலில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை இன்றைக்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.