இன்னும் ஐசியூவில் இருக்கும் செந்தில் பாலாஜி.. உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட முக்கிய தகவல்!

First Published | Jun 24, 2023, 12:11 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில், அவருக்கு 4 இடங்களில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். 

senthil balaji

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சென்னை காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டு கடந்த 21ம் தேதி அதிகாலை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின் சிகிச்சை முடிந்து ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருவதாகவும்,  அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

Tap to resize

இந்நிலையில் காவேரி மருத்துவமனை செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், இதயத்தில் நான்கு அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியூவில் உள்ளதாகவும், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!