தவெக-விடம் உயர்நீதிமன்றம் நடந்து கொண்டது அதிமேதாவித் தனம்..! உச்சநீதிமன்றம் காட்டம்..!

Published : Oct 10, 2025, 04:35 PM IST

உடல் பிரேத பரிசோதனை செய்யக்கூடிய நிபுணர்கள் தான் இதனை செய்தார்களா? என்கிற சந்தேகம் எழுகிறது என தெரிவித்தனர். விரைவாக செயல்பட்டதற்காக ஒரு குற்றச்சாட்டை நாங்கள் முதல்முறையாக எதிர்கொள்கிறோம் ’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

PREV
14

கரூர் துயரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தவெக தொடர்பான வழக்கில் மற்றொரு மனுதாரரான பிரபாகரன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. கரூர் பரப்புரை கூடத்தில் மக்கள் எவ்வளவு பேர் கூடுவார்கள் என காவல்துறை மற்றும் உளவுத்துறை கணிக்க தவறிவிட்டனர். கடந்த ஜனவரி மாதம் அதிமுக அதே பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதிக்கவில்லை. இடையூறாக இருக்கும் என்பதால் அந்த பகுதியில் அனுமதி கிடையாது என காவல்துறை கூறியது. ஆனால் செப்டம்பர் மாதம் அதே பகுதியில் அதிமுகவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தை பொருத்தவரை முழு தோல்வி தமிழக காவல்துறை மீது தான் உள்ளது என்று தனது வாதத்தை முன் வைத்தார். அதிமுகவுக்கு அதிக அளவில் கூட்டம் வரும் என்றால் அதே போல் ஒரு கூட்டம் தான் வரும் தவெகவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

24

அதற்கு நீதிபதிகள் தரப்பில் இந்த விவகாரத்தில் எங்களால் சென்னை உயர்நீதி மன்றத்தின் செயல்பாட்டை புரிந்து கொள்ளவே முடியவில்லை. தினேஷ்குமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் அவரது மனுவில் என்ன கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளிக்கவே இல்லை. அதற்குத்தான் அவர்கள் முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால், மனுவில் கோரிக்கையாக வைக்கப்படாத ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் தனது கவனத்திற்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. நிலையான வழிகாட்டு முறை கோரிதான் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அதுதான் அவருக்கு பிரதான கோரிக்கை யாக இருந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அதனை கருத்தில் கொள்ளாமல் அவரது கோரிக்கைக்கு சம்பந்தமே இல்லாமல் ஒன்றை உத்தரவாக பிறப்பித்து இருக்கிறது. இது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை.

சென்னை உயர்நீதிமன்றம் ஒரு விமர்சனத்தை முன்வைத்து இருக்கிறது. சில கருத்துக்களையும் கூறியிருக்கிறது. கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்பது அவர்களுடைய கோரிக்கையாக இருந்தது. ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் இதில் மற்றொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இது எங்களுக்கு நெருடலாகவே இருக்கிறது. நிலையான வழிபாட்டு நெறிமுறை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கோரிக்கையில் சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்திருக்கிறது. நாம் ஏதாவது ஒரு இடத்தில் நமது எல்லைக்கு உட்பட்டு நடந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

34

இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு தரப்பு அரசு வழக்கறிஞர் வில்சன் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது. மனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே இந்த கோரிக்கை அளிக்கப்பட்டது என பதிலளித்தார்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் பிரேத பரிசோதனை குறித்தும் கேள்வி எழுப்பினர். 4 மணி நேரத்திற்குள் அனைவருக்கும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதா? அங்கு பிரத பரிசோதனை செய்வதற்கான எத்தனை மேஜைகள் இருந்தன’’ என கேள்வி எழுப்பினர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், 27ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. அந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களுடைய எழுச்சியும் கூக்குரலும் இருந்தது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களது உடல்களை உடனே வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் தான் உடல் பரிசோதனை செய்ய அனுமதி அளித்தார். இது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்கிறோம். எங்களுக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்தும் பதில் அளிக்க வேண்டிய நிலைமை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் காலணி வீசப்பட்டது லத்தி சார்ஜ் வைக்கப்பட்டது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு மீது குற்றச்சாட்டுகளை நாங்கள் மறுக்கிறோம். இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும். மரணம் அடைந்தவர்களின் உறவினர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாலேயே உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் உடனடியாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. சம்பவம் நடந்த அன்று முதலமைச்சர் உடனடியாக கரூர் புறப்பட்டார். அப்போதுதான் முதலமைச்சரிடம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உறவினர்களின் உடலை உடனே ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்கள். அதனால் தான் உடனடியாக பிரேத பரிசோதனை செய்தோம். மாவட்ட ஆட்சியரும் அனுமதி அளித்தார் என்று தமிழக அரசு வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டது.

44

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் அனுமதி அளித்ததில் எங்களுக்கு எந்த விதமான கேள்வியும் எழவில்லை. உடல் பிரேத பரிசோதனை செய்யக்கூடிய நிபுணர்கள் தான் இதனை செய்தார்களா? என்கிற சந்தேகம் எழுகிறது என தெரிவித்தனர். அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில் அருகாமையில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டார்கள். விரைவாக செயல்பட்டதற்காக ஒரு குற்றச்சாட்டை நாங்கள் முதல்முறையாக எதிர்கொள்கிறோம் ’’ என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அரசு தரப்பு அவகாசம் கோரியது. அதற்கு அவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம் தற்போது இந்த வழக்கை ஒத்தி வைத்தது.

Read more Photos on
click me!

Recommended Stories