வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தன் கையில் வைத்திருந்த தொகுதி பங்கீடு லிஸ்டை வெளியிட, இது தேமுதிக பொதுச்செயலாளர், டிடிவி.தினகரன், ஓபிஎஸை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
பாஜக-அதிமுக தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சந்திப்புக்கு பிறகு அதிமுக கூட்டணி தொடர்பான தகவல்களை குறிப்பாக, அதிமுகவின் வியூக வகுப்பாளர்கள் தயாரித்த தொகுதி பங்கீடு லிஸ்டில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், பிரேமலதா, உள்ளிட்டோருக்கு சில தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தகவல்கள் பரவின. அதிமுக வியூக வகுப்பாளர்கள் வெளியிட்ட தகவலின்படி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு ஏறக்குறைய இப்படி இருக்கும் என்று கூறி அதிமுக- 170 தொகுதிகள், பாஜக- 23 தொகுதிகள், பாமக- 23 தொகுதிகள், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த்- 6 தொகுதிகள், அமமுக டிடிவி.தினகரன்- 6 தொகுதிகள், ஓபிஎஸ் அணி - 3 தொகுதிகள், தமாகா -3 தொகுதிகள் என பட்டியலை வெளியிட்டனர்.