புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் மாவட்டத்தை கட்டி ஆள்வது அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என திமுகவிலேயே வெளிப்படையாக பேசிக் கொள்கிறார்கள். இது அறிவாலயத்தின் காதுகளுக்கும் எட்ட, விஷயம் சீரியஸாகி இருக்கிறது என்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரகுபதி, மெய்யநாதன் என 2 அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், மாவட்டத்தில் செல்வாக்காக இருப்பது விஜயபாஸ்கர் தான். அதிமுக ஆட்சியில் இலுப்பூர் மற்றும் விராலிமலை பகுதிகளில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கருணாநிதிக்கு சிலை வைக்கவேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட உடன்பிறப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை இரண்டு அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை.புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் மட்டும் ஒரு கருணாநிதி சிலை இருக்கிறது.