விஜய் எல்லாம் அதிமுகவை விமர்சிக்கலாமா..? தவெக-வே லாட்டரி பணத்தில்தான் நடத்தப்படுது.. ஜெயகுமார் அதிரடி அட்டாக்..!

Published : Feb 03, 2026, 03:13 PM IST

உண்மையிலேயே கை சுத்தம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றால் நான் இவ்வளவுதான் வாங்கினேன். வரி கட்டியிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? விஜய்யால் சொல்ல முடியாது.

PREV
14
விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா?

‘‘யார் யாரை விமர்சிக்கறதுன்னே விவஸ்தை இல்லை. விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘1967-க்கு முன்பாக தாழ்ந்திருந்த தமிழகத்தை தலைநிமிரச் செய்தவர் பேரறிஞர் அண்ணா. அவருடைய அன்புத் தம்பிகளாக இருப்பது எங்களுக்கு பெரிய பெருமை. அதிமுக ஆட்சியின்போது பேரறிஞர் அண்ணாவின் அடிச்சுவட்டில் பயணித்து அவரது கனவை நனவாக்கி உள்ளோம். அவருடைய உருவத்தை அதிமுகவின் கொடியில் புரட்சித் தலைவர் பொருத்தினார். அதிமுக 30 ஆண்டுகாலம் ஆட்சிக் கட்டிலில் இருந்து அறிஞர் அண்ணாவின் தத்துவங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டது. அன்பே உருவான அண்ணாவின் தம்பிகளாய் நாங்கள் இருப்பது பெரும் பாக்கியம்.

24
இது வரி ஏய்ப்பு இல்லையா?

தவெக தலைவர் விஜய் தொடர்ச்சியாக அதிமுகவை ஊழல் சக்தி என்று விமர்சிக்கிறாரே? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘‘யார் யாரை விமர்சிக்கறதுன்னே விவஸ்தை இல்லை. விஜய் வாங்குவது வெள்ளையா? கருப்பா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கருப்பு எவ்ளோ… வெள்ளை எவ்வளவு..? வருமான வரி எவ்வளவு செலுத்தி இருக்கிறார்? இன்னைக்கும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நான் அதற்குள் போக விரும்பவில்லை. கருப்பு, வெள்ளை என்றெல்லாம் வாங்குவது சமூகத்துக்கு கேடு இல்லையா?

உண்மையிலேயே கை சுத்தம், ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்றால் நான் இவ்வளவுதான் வாங்கினேன். வரி கட்டியிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? விஜய்யால் சொல்ல முடியாது. கருப்பு அதிகம், வெள்ளை குறைவு. இது வரி ஏய்ப்பு இல்லையா? அதனால் யார் யாரை விமர்சனம் செய்வது என்று விவஸ்தை வேணும்.

34
விஜய் தலைவராவதற்கு அருகதை இல்லை

சரி அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா யாரு? லாட்டரியில் செல்வம் குவித்தவர் ஆதவ் அர்ஜுனா. அவர் வீட்ல போய் இவர் சாப்பிடுகிறார். பாவப்பட்ட, பலரின் ரத்தத்தை உறிஞ்சி கொழுத்தவரின் வீட்டில் போய் இவர் சாப்பிடுகிறார். அந்தக் கட்சியே யார் பணத்தில் நடக்கிறது? லாட்டரி பணத்தில்தான் நடக்கிறது. கரூரில் 41 உயிர்கள் பலியான அன்று இரு தரப்பையும் நான் குற்றம் சாட்டினேன். அந்த உயிர்கள் பலியான சம்பவத்தில் விஜய் மீதும் தப்பு இருக்கிறது. அரசின் மீதும் தப்பு இருக்கிறது. ஆனால் கொஞ்சம்கூட குற்ற உணர்வு இல்லாமல், ஒரு மூன்றாமாண்டு கட்சி தொடக்க விழாவில் டான்ஸ் ஆடறார்னா, அந்த 41 குடும்பங்கள் எந்த அளவுக்கு மனதளவில் கஷ்டப்படுவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். கொஞ்சம்கூட ஈவு, இரக்கம் இல்லாத அவருக்கு தலைவராவதற்கு அருகதை இல்லை. 41 பேர் உயிரிழந்ததைப் பற்றி அவர் ஏதாவது பேசியிருக்கிறாரா?

தவெகவைப் பொறுத்தவரை முழுக்க முழுக்க விசில் விசில் விசில். விசிலை எதுக்கு அடிப்பாங்க? ஆபத்தில் இருக்கும்போதுதான் விசில் அடிப்பார்கள். ஹெல்ப் ஹெல்ப் ஹெல்ப்ன்னு. டைட்டானிக் படம் பார்த்தீங்களா? அதன் க்ளைமேக்சில் என்ன செய்வார்கள்? விசில் அடிப்பார்கள். ஆபத்து என்பதால். அந்த வகையில் அவர்களுக்கும் ஆபத்து, கட்சிக்கும் ஆபத்து’’ என்றார்.

44
சார் நானும் ரவுடிதான்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை ஏற்கும்னு சொல்லிட்டாங்க. ஆனா நேற்று விஜய் பேசும்போது மற்றும் பலர்னு சொல்றாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ‘‘நானும் ரவுடின்ற மாதிரிதான் இருக்கு இது. வடிவேலு. “சார் நானும் ரவுடிதான் என்னையும் ஜீப்புல ஏத்துங்க”ங்கிற மாதிரி. அந்த மாதிரிதான் இதையும் பார்ப்பாங்க. போட்டியே அதிமுகவுக்கும், திமுகவுக்கும்தான். இவரை கன்சிடரே பண்ண மாட்டாங்க. இவரு வந்து ‘நானும் ரவுடி, நானும் ரவுடி’ஜீப்புல ஏத்துங்க’ன்னா அது எப்படி முடியும்? எங்களைப் பொறுத்தவரை அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில்தான் போட்டி. அதிமுக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று எங்கள் பொதுச்செயலாளர் முதலமைச்சர் ஆவார். அதிமுக தலைமையில்தான் கூட்டணி’’ எனத் தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories