வெற்றி முகத்தில் திமுக... அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கோலாகல கொண்டாட்டம்... காற்றில் பறந்த கட்டுப்பாடு!

First Published May 2, 2021, 1:26 PM IST

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கிடைத்த முதல் சட்டமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசுகளையும் வெடித்தும், ஆட்டம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அதில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவியது.
undefined
இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
undefined
தற்போதைய நிலவரப்படி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 147 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 86 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
undefined
இதனால் உற்சாகமடைந்த திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் ஒன்று கூடியுள்ளனர்.
undefined
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கிடைத்த முதல் சட்டமன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடும் விதமாக பட்டாசுகளையும் வெடித்தும், ஆட்டம் ஆடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
undefined
அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்களுக்கு வெற்றியை பறைசாற்றும் விதமாக இனிப்புகள் வழங்கப்பட்டன.
undefined
வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாகவே திமுக தலைவர் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வெற்றி கொண்டாட்டங்களை வீட்டிற்குள்ளே வைத்துக் கொள்ளும் படியும், கொரோனா காலத்தில் தொண்டர்களின் உயிர் தான் முக்கியம் என்றும் தெரிவித்தார்.
undefined
ஆனால் தேர்தல் ஆணையத்தின் கட்டுபாடுகளை மதிக்காமல் சமூக இடைவெளியின்றி அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது பல விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
undefined
click me!