தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் விந்தியா. ஜெயலலிதா மீது அளவு கடந்த அன்பு, பாசம், பற்று, மரியாதை காரணமாகத்தான் அ.தி.மு.க.வில் தன்னை ஆரம்பத்தில் இணைத்து கொண்டார். ஜெயலலிதா தன்னுடைய ரோல் மாடல் என்று அடிக்கடி சொல்வார்.
முதலில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக வலம் வந்த விந்தியா. தற்போது கொள்கை பரப்புச் செயலாளராக வலம் வருகிறார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும் கூட அவர் மீதான பற்றில் துளியும் குறையாதவர். இப்போது கூட ஏதாவது பிரச்சாரம், பொதுக்கூட்டங்களுக்கு புறப்படுவது என்றால் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மரியாதை செலுத்திவிட்டு தான் செல்கிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்து. அதற்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்தது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை விந்தியா சூறாவளி பிரச்சாரம் செய்தார்.
பி.எம். ஆக ஆசைப்படும் ராகுலில் தொடங்கி சி.எம்.ஆக ஆசைப்படும் ஸ்டாலின் வரை எதிர்க்கட்சி தலைவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். திமுகவின் ஊழல் முகத்தையும், வாரிசு அரசியலையும் தோலுரித்து பேசிய விந்தியாவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியது.
தற்போது சட்டமன்ற தேர்தல் முடிந்து ரிசல்டுக்காக அனைவரும் காத்திருக்கும் இந்த சமயத்தில் விந்தியாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் சோசியல் மீடியாவில் வலம் வர ஆரம்பித்தன. மாரடைப்பு காரணமாக விந்தியா திடீரென உயிரிழந்ததாக அந்த போஸ்டர்களில் இடம் பெற்றிருந்தது அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஆனால் வைரலாகும் இந்த போஸ்டர்களுக்கு பின்னால் திமுகவினரின் சேட்டை இருப்பதை நடிகை விந்தியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கியுள்ளார். அதில், “உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா” என கெத்தாக பதிவிட்டுள்ளார்.