சிபிஐ அமைப்பில் வேலை செய்வதற்கான ஆட்கள் கிடையாது. அதிகாரிகள் இல்லாமல் சிபிஐ தத்தளிக்கிறது. சிபிஐ பொறுத்தவரையில் தீர்வு காண முடியாத ஒரு அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுதான் சிபிஐயினுடைய பிரச்சினை.
கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு சவுக்கடி என எல்.முருகன் கூறியது குறித்த கருத்துக்கு ”உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாநில அரசுக்கு சவுக்கடி என்றால் உயர் நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா?” என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘என்னைப் பொறுத்தவரையில் எந்த நீதிமன்றத்திற்கும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு திமுக அரசுக்கு சவுக்கடி என்று கூறினார் மத்திய அமைச்சர்கள் எல்,முருகன். அப்படியானால் உயர்நீதிமன்ற தீர்ப்பு மத்திய அரசுக்கு சவுக்கடியா? உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் சென்றன. எஸ்ஐடி அமைத்து உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்பதுதான் தவெகவின் அடிப்படை மனு. இன்னொரு அதிமுகவினுடைய மனுவாக இருக்கலாம்.
23
சிபிஐ நியாயத்தை கண்டுபிடித்து விடுமா?
பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக சிபிஐ விசாரணை கோரி மனு செய்தனர். இது தவெகவின் மனு கிடையாது. ஆனாலும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எங்களை பொருத்தமட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். ஆனால், சிபிஐ நியாயத்தை கண்டுபிடித்து விடும். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவார்கள். உடனடியாக விசாரணை முடித்து விடுவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதற்கு உதாரணம் நாம் கண்ணுக்கு எதிராக பார்க்கக்கூடிய ஒரு வழக்கு. திருப்புவனம் அஜித் குமார் படுகொலையை சிபிஐ என்ன செய்து வைத்திருக்கிறது?
33
அமித் ஷா தான் முடிவு செய்வார்
சிபிஐ அமைப்பில் வேலை செய்வதற்கான ஆட்கள் கிடையாது. அதிகாரிகள் இல்லாமல் சிபிஐ தத்தளிக்கிறது. சிபிஐ பொறுத்தவரையில் தீர்வு காண முடியாத ஒரு அமைப்பாக மாறிக்கொண்டிருக்கிறது. இதுதான் சிபிஐயினுடைய பிரச்சினை. பிரதமருக்கு சிபிஐ ரிப்போர்ட் கொடுத்தாலும் அது அமித் ஷாவின் கையில் இருக்கிறது. உடனே தீர்வாகிவிடும், உடனே நியாயம் கிடைத்து விடும் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு. இப்படியெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது அது வெறும் கண்துடைப்பு அமைப்பாக மாறிவிட்டது. அமித் ஷா கையில் சிபிஐ இருக்கிறது. சிபிஐ அமைப்பை அவர் எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்படி பயன்படுத்துவார். எல்.முருகன் சொல்வது போல் பயன்படுத்துவாரோ அல்லது அண்ணாமலை சொல்வது போல் பயன்படுத்துவாரோ, அதை அமித்ஷா அவர்கள் தான் முடிவு செய்வார்’’ எனத் தெரிவித்துள்ளார்.