சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் உச்சமெடுத்து வருகின்றன. அதிகபட்சம் 30 தொகுதிகள் ஒதுக்கித் தருவதாக திமுக முன் வந்த நிலையில் திடீரென ராகுல்காந்தி தனது திமுக கூட்டணி முடிவை மாற்றிக் கொண்டுள்ளார் என்கிறார்கள்.தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால் மிகப்பெரிய ஆஃபர்கள் கிடைக்கும் என நினைக்கும் காங்கிரஸ் இறுதிக்கட்டமாக தவெகவுடன் கூட்டணி என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி போட்டு 25 தொகுதிகளில் போட்டியிட்டது. 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக தொகுதி தொகுதிகளை ஒதுக்கி தரும்படி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. உச்சகட்டமாக முப்பது தொகுதிகள் வரை ஒதுக்கி தரலாமென திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் 35 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.