''நாங்கள் வேண்டுமானால் எங்களுக்கு ஒதுக்கும் சீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். ஆனால், காங்கிரஸ் வெளியில் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நீண்ட காலம் ஜவ்வாக இழுத்து வந்த திமுக- காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸுக்கு வரும் சட்டப்பேரவை தேர்தலில் 28 தொகுதிகளையும், 1 ராஜ்யசபா சீட்டையும் ஒதுக்கியுள்ளது திமுக. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், பெரும் அக்கப்போருக்கு பிறகு வெறும் 3 சீட்டுகள் மட்டுமே கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
24
முடிவுக்கு வந்த அக்கப்போர்
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்ட ஒப்பந்த அறிக்கையில், ''நடைபெற உள்ள 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினும் -தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகையும் தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் 28 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதெனவும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் செய்யப்பட்டது'' எனக் கூறப்பட்டுள்ளது.
34
உளவுத்துறைக்கு உத்தரவு
காங்கிரஸ் கொடுத்த நெருக்கடியால் ஒரு கட்டத்தில் அக்கட்சியுடன் கூட்டணியே வேண்டாம் என அதிருப்தியாகி விட்டார் மு.க.ஸ்டாலின். "கேட்டதை எல்லாம் கொடுக்க முடியாது. கொடுக்குற சீட்டு எல்லாமே எம்எல்ஏ சீட்டுக்கள் என்பதை மனதில் வைத்து பேசச் சொல்லுங்கள்" என கொந்தளித்து காங்கிரஸாருக்கு இறுதி தகவலை சொல்லி அணுப்பி இருக்கிறார் ஸ்டாலின்.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் இல்லை என்றால் திமுகவுக்கு எந்தெந்த தொகுதிகளில் சிக்கல் வரும் என உளவுத்துறை மூலமாக ஒரு ரிப்போர்ட்டையும் தயார் செய்ய சொல்லி இருக்கிறார் ஸ்டாலின். காங்கிரசால் இழக்கிற வாக்குகளை எந்த வகையில் ஈடு கட்டலாம் என திமுக தலைமை யோசிக்க ஆரம்பிக்க, காங்கிரஸின் முக்கிய தமிழக தலைவர்களே டெல்லி தலைமையின் பிடிவாதத்தை எதிர்த்து வெளியேறவும் முடிவு செய்திருக்கிறார்கள். 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் பிளவுபட்டது போல மீண்டும் காங்கிரஸ் பிளவு படும் சூழலும் நிலவியுள்ளது.
இவற்றையெல்லாம் கவனித்த திமுக கூட்டணியில் இருக்கிற பிற கட்சி தலைவர்கள் ''நாங்கள் வேண்டுமானால் எங்களுக்கு ஒதுக்கும் சீட்டுகளை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம். ஆனால், காங்கிரஸ் வெளியில் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்'' என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அதேபோல திமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை முடிவு செய்து தொகுதி செலவுக்காக ஒரு பெரும் தொகையை அறிவாலயத்தில் கட்டச் சொல்லி பலருக்கும் திமுக தலைமை உத்தரவு போட்டுள்ளது. அதில் பல பேர் சிலர் பணம் கட்ட தயங்கியுள்ளனர். இதற்குக் காரணம் என்ன என அறிவாலய தலைமை விசாரிக்க "கூட்டணியில் காங்கிரஸ் இணைந்தால் எல்லோரும் பணம் கட்டலாம்" எனக் காத்திருப்பதாக சொல்லி பதில் வந்திருக்கிறது. இதற்கு பிறகே காங்கிரஸ்காக முடிவு செய்து வைத்திருந்த தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்திருக்கிறது திமுக தலைமை என்கிறார்கள்