இப்படை தோற்பின் எப்படை வெல்லும்? அண்ணாவுக்கு பேரணியாக சென்று மரியாதை செலுத்திய முதல்வர்

First Published | Feb 3, 2023, 11:37 AM IST

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதி பேரணியாக சென்று அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Mk Stalin

முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன்படி அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Mk Stalin

அந்த வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணாவின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

Tap to resize

Mk Stalin

மரியாதை செலுத்துவதற்காக திமுக அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் புடைசூழ நடை பயணமாக சென்று மரியாதை செலுத்தினார். 

Mk Stalin

இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Mk Stalin

இதனைத் தொடர்ந்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “களம் சென்று காணுகின்ற வெற்றிக்கு நம்மையெல்லாம் ஊக்குவிக்கும் தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா நீடுதுயில் கொண்ட நாள்!

Mk Stalin

தம்பி என்று தமிழர்தமைத் தட்டியெழுப்பிய அண்ணனின் நினைவுகளைச் சுமந்து, தம்பிமார் படை அமைதிப் பேரணிச் சென்றோம்.

Mk Stalin

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்! தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Mk Stalin

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற அண்ணனின் முழக்கத்தை என்றும் மெய்ப்பிக்க உறுதியேற்போம்! தனயனாய் அவர் பெயரிட்ட தமிழ்நாட்டை மேதினியில் உயரக் கொண்டு செல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!