முதல் தேர்தலிலேயே முழு அரசியல்வாதியாக மாறிய குஷ்பு... மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் வாக்கு சேகரிப்பு!

First Published Mar 28, 2021, 8:00 PM IST

இன்று நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட தியாகராய நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சீக்கிய குருத்வாரா கோயிலுக்குள் சென்ற குஷ்பு வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக என இருமுனை அல்லது மும்முனை போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில், தற்போது திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது.
undefined
கடும் போட்டியை சமாளிப்பதற்காக கடந்த தேர்தல்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஐடியாக்களுடன் வேட்பாளர்கள் களத்தில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
undefined
​சுயேட்சை வேட்பாளர்கள் முதல் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் வரை காய்கறி விற்பது, பாட்டு பாடுவது, நாற்று நடுவது, தோசை சுடுவது, மீன் பொறிப்பது என வாக்கு சேகரிக்க பகுதிகளில் தினுசு, தினுசான டெக்னிக்குகளை முயற்சித்து வருகின்றனர்.
undefined
சமீபத்தில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் களமிறங்கியுள்ள குஷ்பு வாக்கு சேகரிப்பின் போது உணவகம் ஒன்றில் மொறு, மொறு தோசை சுட்டது சோசியல் மீடியாவில் வைரலானது.
undefined
இந்நிலையில் இன்று நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட தியாகராய நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
undefined
சீக்கிய குருத்வாரா கோயிலுக்குள் சென்ற குஷ்பு, அங்கு பிரார்த்தனை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி அங்கிருந்த சீக்கிய மக்களிடமும் பாஜகவின் வாக்குறுதிகளையும், மத நல்லிணக்க கொள்கைகளையும் எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார்.
undefined
தங்களுடைய கோயிலில் வழிபாடு நடத்திய குஷ்புவிற்கு சீக்கிய மக்களும் அன்பாக வரவேற்பு கொடுத்தன
undefined
click me!