குஷ்புவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?... கடன் மட்டும் ரூ.3.45 கோடியாம்...!

First Published Mar 19, 2021, 11:59 AM IST

நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடிகை குஷ்பு தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த தொகுதிகள் அனைத்திற்கும் சமீபத்தில் வேட்பாளர்களையும் அறிவித்தனர். அதில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளது உறுதியானது.
undefined
தனக்கு பாஜக தலைமை சேப்பாக்கம் தொகுதி ஒதுக்க அதிக வாய்ப்புள்ளது என அத்தொகுதியில் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பிருந்தே மக்களை சந்திப்பது, ஆதரவு திரட்டுவது என வேகம் காட்டினார். பின் அவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரம் விளக்கு பகுதியில் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
undefined
நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடிகை குஷ்பு தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போதிலிருந்தே பிரபல நடிகையான குஷ்புவின் சொத்து மதிப்பு குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்நிலையில் குஷ்புவின் வேட்புமனுவில் அவருடைய சொத்து குறித்த முழு தகவல்களும் எவ்வித ஒளிவு மறைவின்றி கிடைத்துள்ளது.
undefined
குஷ்பு தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது பெயரில் 4.55 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும்,கணவர் சுந்தர் சி பெயரில் 1.83 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 8.55 கிலோ தங்க நகைகள், 78 கிலோ வெள்ளி பொருட்கள், 2 கார்கள், முட்டுக்காடு, திருக்கழுன்றத்தில் சொகுசு பங்களா ஆகியன இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
undefined
கணவர் பெயரில் மேடவாக்கம் மற்றும் கோவையில் பங்களாவும், 3 கார்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் தன்னுடைய பெயரில் 17.99 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும், கணவர் பெயரில் 16.57 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாகவும். தனது பெயரில் ரூ.3 கோடி 45 லட்சம், 13 ஆயிரம் 950 மதிப்பிலும், கணவர் பெயரில் 55 லட்சம் 55 ஆயிரம் 939 மதிப்பில் கடன்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
undefined
click me!