கேடு கெட்ட பாஜவுக்கு ஜால்ரா அடிக்கும் அதிமுக! அது ஆடியோ, வீடியோ கட்சி! பரப்புரையில் பட்டையை கிளப்பும உதயநிதி.!

First Published Feb 22, 2023, 10:15 AM IST

பாஜக என்பது ஆளுநரின் டிரெயினிங் சென்டர். ஓ.பன்னீர்செல்வம் ஆளுநராக விரைவில் அறிவிக்கப்படலாம், அவருக்கு வாழ்த்துகள்.  எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவராகிவிடுவார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு ஆய்வு செய்ய வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர் ஈரோடு மாவட்டத்திற்கு முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்து இருக்கிறேன். மகன் விட்டு சென்ற பணியை தந்தை ஆற்ற வாய்ப்பு கொடுங்கள்.  ஈவிகேஎஸ் இளங்கோவனை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால்  மாதம்தோறும் ஈரோட்டிற்கு வருவேன். 

அதிமுக அரசு 5 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்றது. இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் மகளிருக்கான உரிமைத்தொகை வழங்கப்படும். நான் உறுதி மொழி கொடுக்கிறேன். தமிழக உரிமைகளை பாஜவிடம் அடகு வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவைதான் மக்கள் வாக்களித்து முதல்வராக்கினார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வரானார். எடப்பாடி பழனிசாமிக்கு யாருக்கும் உண்மையாக இருந்ததில்லை. மத்திய அரசுக்கு காவடி தூக்கிக்கொண்டு இருக்கிறார்.

19 மசோதாக்கள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. என்றைக்காவது ஒருநாள் ஆளுநரிடம் போய் மசோதாக்கள் நிலுவையில் இருப்பது பற்றி பேசி டெல்லிக்கு அனுப்புங்கள் என்று சொல்லியிருப்பாரா?  என கேள்வி எழுப்பினார். மோடியை சந்திப்பது எல்லாம் என்ன பிரச்சினைக்கு.. அவருடைய கட்சி பஞ்சாயத்துக்கு மட்டும் தான் போவார் என்றார். 

மேலும் கேடு கெட்ட பாஜவுக்கு ஜால்ரா அடிக்கும் அதிமுகவுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும். பாஜக என்பது ஆடியோ, வீடியோவை வைத்து மிரட்டுகின்ற கட்சி. பாஜக என்பது ஆளுநரின் டிரெயினிங் சென்டர். ஓ.பன்னீர்செல்வம் ஆளுநராக விரைவில் அறிவிக்கப்படலாம், அவருக்கு வாழ்த்துகள்.  எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவராகிவிடுவார். 

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு ஆய்வு செய்ய வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் இந்த செங்கல் ஒன்றுதான் அங்கு இருந்தது என என உதயநிதி கிண்டலாக பேசினார். 

click me!