சிங்கப்பூரில் கோட் சூட் போட்டு கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்... வைரலாகும் போட்டோஸ்

First Published May 24, 2023, 2:15 PM IST

தொழில் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்ற நிலையில், இன்று சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்தார். 


 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும். சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-க்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று  சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

இதனையடுத்து இன்று சிங்கப்பூர் நாட்டிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்,  Temasek. Sembcorp, Ciplta.and ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களை சந்தித்துப் பேசினார், அப்போது தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்திட வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார். 

 டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலரிடம், இந்தியாவில் தென் பகுதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தெற்காசிய நாடுகளிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள காற்றாலைகளை வதுப்படுத்தவும், புதிய கடல் சார்ந்த காற்றாலைகளை நிறுவவும் டமாசெக் நிறுவனத்தை கேட்டுக் கொண்டார். தற்போது இளம் தொழில் முனைவோர்களை தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருவதால் Startup நிறுவனங்கள் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரிவுகளில் புதிய தொழில்களை தொடங்கி வருகிறது. இந்த Startup நிறுவணங்களில் டமாசெக் நிறுவனம் முதலீடு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதற்கு டமாசெக் நிறுவன தலைமை செயல் அலுவலர் அவர்கள்,  மீன்பிடி சார்ந்த தொழில் துறைகளிலும், உணவுப் பதப்படுத்தும் துறைகளிலும் தங்கள் நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செம்ப்கார்ப் (Sembcorp) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. கிம்யின் வாங்க் அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பின்போது,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உலக அளவில் செம்ப்கார்ப் நிறுவனம் சிறப்பான இடத்தை வகித்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டதோடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழ்நாடு இந்தியாவின் மிக முக்கியமான மாநிலம் என்றும், எரிசக்தி தொடர்பான பல்வேறு பிரிவுகளில் செம்ப்கார்ப் நிறுவனம் தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 

தொடர்ந்து கேப்பிட்டா லேண்ட் (CapltLand) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தாவுடன்  தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனையின் போது  கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் பல்வேறு புதிய தளங்களில் கால் பதித்து வருவதற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். உலகின் மிகச்சிறந்த தொழில் நுட்பங்களை ஒருங்கிணைத்து சிங்கப்பூரில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனம் வடிவமைத்துள்ள சிங்கப்பூர் சயின்ஸ் பார்க்' போன்ற பல்வேறு பல்வேறு வகையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (Research and Development) கட்டமைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு அரசு ஆர்வமாக உள்ளதால் அவற்றில் கேப்பிட்டா லேண்ட் நிறுவனத்தின் தொழில்நுட்ப பங்களிப்பையும் முதலீடுகளையும் அளித்திட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்திப்பின் போது  அந்த நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்கள், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வதற்கு தங்கள் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளதாகவும், விரைவில் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தனர். 
 

இந்த சந்திப்பிற்கு பின் இன்று மாலை தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) பேம்டிஎன், டான்சிம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்  ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTDசிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு SIPO மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு-SICCI ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. 

இந்த பயணங்களை முடித்துக்கொண்ட பின்னர் ஜப்பான் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், முன்னணி தொழில்துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து,தமிழகத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள  உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க இருக்கிறார்.

click me!