Budhan peyarchi 2022: இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி..புது விடியலை சந்திக்க போகும்,யோகம் கொண்ட ராசிகள்!

Published : Oct 20, 2022, 03:00 PM IST

Budhan peyarchi 2022 Palangal: தீபாவளிக்கு பிறகு, புத்தி மற்றும் பேச்சின் கடவுளான புதன் பெயர்ச்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், குறிப்பிட்ட ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

PREV
15
Budhan peyarchi 2022: இன்னும் 5 நாட்களில் புதன் பெயர்ச்சி..புது விடியலை சந்திக்க போகும்,யோகம் கொண்ட ராசிகள்!

புதன் பெயர்ச்சி 2022: 

ஜோதிடத்தில், புதன் கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் இளவரசனாக கருதப்படுகிறது. ஜாதகத்தில், புதன் கிரகத்தின் நிலை ஒரு நபரின் ஆளுமை, பேச்சு, வேலை , வியாபாரம், கல்வி, அறிவுத் திறன், நிதி நிலை மற்றும் வணிகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது.  புதன் கிரகம் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் சில ராசிக்காரர்கள் இதனால், தொழில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.


 

25

மகரம்:

புதனின் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். தீடீர் பண வரவு மகிழ்ச்சியை கூட்டும்.  அலுவலக வேலை காரணமாக பிஸியாக இருப்பீர்கள். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கலாம். மகரந்த ராசிக்காரர்கள் நீண்ட பயணம் ஒன்றில் செல்லக்கூடும். இந்த பயணத்தால் அனுகூலமான பலன்கள் உருவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். சொத்து, பூர்வீக வியாபாரம் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

35

தனுசு

துலாம் ராசியில் புதன் நுழைவது இந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் வருமானம் அதிகரிக்கும். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். தொழிலில் லாபம் கிடைக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன. காதல் உறவு மகிழ்ச்சியை தரும். எதிர்காலத்தில் பண ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் உறவு மேம்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

 

45

துலாம்:

புதன் கிரகம் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் போது இந்த ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்கள் தொடங்கும். வேலை, வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைத் தரும். சொத்து, வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆதாயமடைவார்கள். வேலையில் உங்களின் வரம்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். முதலீடு மூலம் லாபம் உண்டாகும்.இது இவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். 

55

கன்னி

 இந்த ராசியின் இரண்டாம் வீட்டில் புதன் சஞ்சரிக்கப் போகிறார். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். தொழில் துறையில் புதிய உயரங்களை தொடுவீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றி பெறுவார்கள். இந்த நேரத்தில் கடனாக கொடுத்து சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். பேச்சுத்திறன் மற்றும் சந்தைப்படுத்தல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் சிறந்தது. பண வரவு சாதகமாக இருக்கும்.  

மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்.! கும்பம் ராசிக்கு ஆசை நிறைவேறும்..துலாம் ராசிக்கு லாபம், உங்கள் ராசிக்கு என்ன பலன்.?

Read more Photos on
click me!

Recommended Stories