Washing Machine Safety: வேலையை மிச்சப்படுத்தும் வாஷிங் மெஷின் உயிரையும் பறிக்கும்! இந்த 3 தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்!

Published : May 06, 2026, 11:39 AM IST

Washing Machine: வாஷிங் மெஷின் பயன்பாடு அவசியமானாலும், அது இயங்கும்போது குளிப்பது போன்ற சில செயல்கள் ஆபத்தை விளைவிக்கும். மெஷினின் வயர்கள் தேய்ந்து, மின்சாரம் நீரில் பாய்ந்து ஷாக் அடிக்க வாய்ப்புள்ளது.

PREV
17
வாஷிங் மெஷின்

கைகளால் துணிகளைத் துவைக்கும் காலம் மாறிவிட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் வாஷிங் மெஷின் என்பது இன்றைய அவசர கால வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு வீட்டு உபயோகப் பொருளாகிவிட்டது. குறிப்பாக காலையில் வேலைக்கு செல்வோர் அதிகளவில் வாஷிங் மெஷினை பயன்படுத்தி வருகின்றனர். துணிகளை ஊறவைப்பது முதல், துவைப்பது, அலசுவது மற்றும் உலர வைப்பது வரை அனைத்து வேலைகளையும் அதுவே செய்துகொள்கிறது.

27
வாஷிங் மெஷின் மறைந்திருக்கும் ஆபத்து

இந்நிலையில் வாஷிங் மெஷின் மனிதனின் வேலையை எவ்வளவு மிச்சப்படுத்துகிறதோ அதே அளவுக்கு பெரிய ஆபத்துகளும் உள்ளது. அதாவது மெஷின் ஓடும்போது குளிப்பது மிகவும் ஆபத்தானது. அதாவது வாஷிங் மெஷினை ஆன் செய்துவிட்டு அதுபாட்டுக்கு ஓடட்டும் என நாம் வேறு வேலையை பார்த்து கொண்டு இருப்போம். ஆனால், மெஷின் இயங்கும்போது சில வேலைகளைச் செய்யவே கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

37
குளிக்கச் செல்லக்கூடாது

வாஷிங் மெஷின் ஓடும்போது தவறியும் குளிக்கச் செல்லக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். இது பலருக்கு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், இதனால் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

47
மின்சாரம் நீரில் பாயும்

வாஷிங் மெஷின் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு மின்சார சாதனம். நீண்ட நாள் பயன்பாட்டால், மெஷினுக்குள் இருக்கும் வயர்கள் தேய்ந்து போகலாம். இந்த லைவ் வயர், மெஷினின் வெளிப்புற உலோகம் அல்லது நீரை வெளியேற்றும் பம்பில் பட்டால், மின்சாரம் நீரில் பாயும். பல வீடுகளில், வாஷிங் மெஷின் மற்றும் ஷவர் ஒரே பிளம்பிங் அமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். அப்போது, மெஷினில் இருந்து வரும் மின்சாரம், பைப் வழியாக நீங்கள் குளிக்கும் தண்ணீரை அடைந்து ஷாக் அடிக்க வாய்ப்புள்ளது.

57
தண்ணீர் வேகம் குறையும்

உங்கள் வீட்டிலும் வாஷிங் மெஷின் மற்றும் ஷவர் ஒரே பைப்பில் இருந்து தண்ணீர் பெற்றால், மெஷின் ஓடும்போது நீங்கள் குளிக்கச் சென்றால், ஷவரில் தண்ணீர் வேகம் குறையலாம்.

67
எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்

பழைய வயரிங் உள்ள வீடுகளில், வாஷிங் மெஷின் மற்றும் எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர் (கீசர்) இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கினால், சர்க்யூட் ஓவர்லோட் ஆகி, ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு தீ விபத்து ஏற்படலாம்.

77
ஈரக்கைகளால் சுவிட்சை தொடவே தொடாதீர்கள்

வாஷிங் மெஷின் ஓடி முடிந்த பிறகு, குறைந்தது 30 முதல் 40 நிமிடங்கள் கழித்து குளிப்பது நல்லது. உங்கள் வீட்டில் எர்த் கனெக்‌ஷன் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாத்ரூமில் வாஷிங் மெஷின் இருந்தால், ஈரக்கைகளால் சுவிட்சை தொடவே தொடாதீர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories