கொட்டாவி விடுறப்ப கண்ணீர் ஏன் வருது தெரியுமா?

Yawn and Tears : கொட்டாவி விடும்போது ஏன் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அது ஏன் தெரியுமா?

கொட்டாவி விடுறப்ப கண்ணீர் ஏன் வருது தெரியுமா?

மனிதனுக்குள் நடக்கும் சில இயற்கையான விஷயங்களை நிறுத்தவே முடியாது அவற்றில் ஒன்றுதான் கொட்டாவி. மனிதன் முதல் மிருகங்கள் வரை என அனைவருக்கும் கொட்டாவி வரும். பொதுவாக தூக்கம் வந்தால் கொட்டாவி வரும் என்று தான் சொல்வார்கள். இத்தகைய சூழ்நிலையில், கொட்டாவி ஏன் வருகிறது? கொட்டாவி விடும்போது கண்ணீர் வருவது ஏன்? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கொட்டாவி வருவது ஏன்?

கொட்டாய் வருவதற்கு முக்கிய காரணம் எதுவென்றால், அது மூளை. ஏனென்றால், நம்முடைய உடலின் வெப்பநிலையானது 30 முதல் 40 செல்சியஸ் வரை தான் இருக்கும். மூளையின் வெப்பநிலை எப்போது அதிகரிக்கிறதோ அப்போதுதான் மூளையானது கொட்டாவியை வரவழைக்கும். உங்களுக்கு தெரியுமா சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 20 முறை கொட்டாவி வருமாம். ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கருவில் இருக்கும் குழந்தை கூட கொட்டாவி விடுமாம்.


கொட்டாவி அதிகமாக வந்தால் என்ன?

கொட்டாவி விடுவது பிரச்சனை அல்ல. ஆனால் அது அளவுக்கு அதிகமாக வருவது தான் பிரச்சனை. பொதுவாக கல்லீரல் பிரச்சனை, மூளை கை, கால் வலி சரியாக தூங்காமல் இருப்பது போன்றவற்றால் தான் கொட்டாவி வரும். அதுபோலவே சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும் கொட்டாவி வரும். முக்கியமாக மூளைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருந்தாலோ அல்லது சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்தாலோ கொட்டாவி கண்டிப்பாக வரும்.

இதையும் படிங்க:  அதிகமாக கொட்டாவி விடுவது ஆபத்து.. உடல் பேசும் மொழியை கேளுங்கள்

கொட்டாவி விடும்போது கண்ணீர் வருவது ஏன்?

கொட்டாவி விடும் போது கண்ணீர் வருவது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு முக்கிய காரணம் புருவங்களுக்கு கீழே அமைந்துள்ள லாக்ரிமல் சுரப்பிகள் தான். பொதுவாக இந்த சுரப்பிகள் நாம் அழும் போது கண்ணீரை உற்பத்தி செய்கின்றது. கொட்டாவி விடும்போது நம்முடைய தசைகள் சுருங்குகின்றது இதன் காரணமாக லாக் ட்ரிமல் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கண்ணீரை வெளியேற்றுகின்றது. இதனால்தான் நாம் கொட்டாவி வரும்போது கண்ணீர் வருகிறது.

இதையும் படிங்க:  ஒருத்தர் கொட்டாவி விட்டால் உடனே நமக்கும் கொட்டாவி வருதே ஏன் தெரியுமா? அதுக்கு இப்படி ஒரு வரலாறா?! 

கண்ணீர் வரவில்லையென்றால் என்ன?

கொட்டாவி விடும் போது கண்ணீர் எல்லாருக்கும் வரும் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் சிலருக்கு கொட்டாவி விடும்போது கண்ணீர் வரவே வராது. இதற்கு முக்கிய காரணம் கண்கள் வறண்ட நிலையில் இருப்பதால்தான். கண்கள் வறண்டு இருந்தால் லாக்ரிமல் சுரப்பியால் கண்ணீரை வெளியேற்றுவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். இதன் காரணமாக தான் சிலருக்கு கொட்டாவி விடும்போது கண்ணீர் வருவதில்லை. ஆனால் கொட்டாவி வரும்போது கண்டிப்பாக கண்ணீர் வரவேண்டும் என்று அவசியமில்லை. அது இயல்பானது என்பதால் வரலாம், வராமலும் இருக்கலாம்.

Latest Videos

click me!