Parenting Tips : பெற்றோரே! குழந்தைங்க இருட்டுல போன் யூஸ் பண்றாங்களா? இதை செய்ய மறக்காதீங்க

Published : Dec 12, 2025, 06:47 PM IST

குழந்தைகள் இருட்டில் போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
17
Parenting Tips

தற்போது பல பெற்றோர்கள் தங்களது குழந்தை அழுதாலோ, சாப்பாடு ஊட்டினாலோ போன்ற விஷயங்களுக்கு அவர்கள் கையில் மொபைல் போன் கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் கூட வீட்டிற்கு வந்ததும் மொபைல் போனில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆனால் இது அவர்களின் கண்களை அதிகமாக பாதிக்கும் என்று பல பெற்றோருக்கு தெரிவதில்லை. அதுவும் லைட் இல்லாமல் இருட்டில் போனை பார்ப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகள் இருட்டில் போனை அதிக நேரம் பயன்படுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

27
கண் எரிச்சல் :

குழந்தைகளின் கண்கள் முழுமையாக வளர்ச்சியடைந்து இருக்காது. அந்த சமயத்தில் அவர்கள் அதிக நேரம் இருட்டில் போன் பார்த்தால் கண்களில் தசைகளில் அழுத்தம் மற்றும் எரிச்சல் ஏற்படும்.

37
கண்கள் சிவந்து போதல் :

குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பார்க்கும்போது அவர்களில் கண்களில் இருக்கும் ஈரப்பதமானது கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும் மற்றும் கண்கள் சிவந்து போகும்.

47
தூக்கம் பாதிக்கப்படும் :

குழந்தைகள் அதிக நேரம் திரைகளை பார்த்தால் மெலடோனின் என்ற ஹார்மோனின் சமநிலை சீர்குழைந்துவிடும். இதனால் அவர்களது தூக்கம் பாதிக்கப்படும்.

57
20-20-20 விதி பின்பற்றவும்

20-20-20 விதி என்பது ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 20 தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை 20 நிமிடங்கள் பார்க்க வேண்டும். இப்படி செய்வது கண் தசைகளுக்கு ரொம்பவே நல்லது. குறிப்பாக இதனால் கண் தசைகள் சோர்வடைவது குறையும் மற்றும் எரிச்சலடையாது.

67
ஆரோக்கிய உணவுகள் :

குழந்தைகளின் கண்கள் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு கேரட், கீரை, நெல்லிக்காய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை கொடுங்கள். இவை கண் பார்வையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வறட்சியடைவதையும் தடுக்கும்.

77
குறைவான திரை நேரம் :

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தை மொபைல் போன் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட நேரத்தை மட்டுமே கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களது கண் பாதிப்படையாது.

Read more Photos on
click me!

Recommended Stories