Mosquito bite reasons : பலர் அருகில் இருந்தாலும் கொசு உங்களை மட்டும் தேடி கடிப்பது ஏன்? காரணம் தெரியுமா?

Published : Nov 27, 2026, 07:15 AM IST

Mosquito bite : வீட்டில் பலர் இருந்தாலும் கொசுக்கள் உங்களை மட்டும் அதிகம் கடிக்கிறதா? உடல் வாசனை, வியர்வை, கார்பன் டை ஆக்சைடு, உடல் வெப்பம், சரும பாக்டீரியாக்கள் என இதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான அறிவியல் காரணங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

PREV
18
கொசு உங்களை மட்டும் தேடி கடிப்பது ஏன்?

வீட்டில் நான்கு பேர் ஒன்றாக அமர்ந்திருந்தாலும், கொசுவுக்கு மட்டும் உங்கள் மீது என்ன அத்தனை பாசமோ தெரியவில்லை. அருகில் இருப்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு, உங்களை மட்டுமே குறிவைத்து வந்து கடிக்கிறது. கை, கால் என உடல் முழுவதும் தடயங்களைப் பதித்துவிட்டுச் செல்கிறது. மற்றவர்கள் நிம்மதியாக அமர்ந்திருக்க, உங்களுக்கு மட்டும் கொசுவிடமிருந்து தப்பிப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறதா?

அப்படியானால், கொசுக்களுக்கு உங்களை மட்டும் ஏன் மிகவும் பிடிக்கிறது? உங்கள் ரத்தத்தில் ஏதாவது தனித்தன்மை இருக்கிறதா? அல்லது உங்கள் உடலில் இருந்து வெளிப்படும் வாசனைதான் கொசுக்களை ஈர்க்கிறதா?

இதற்குப் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் ரத்த வகை முதல் உடலில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு, உடல் வெப்பநிலை, வியர்வை மற்றும் சருமத்தில் இயற்கையாக இருக்கும் சில வேதிப்பொருட்கள் வரை பல விஷயங்கள் கொசுக்களை ஈர்க்கக்கூடும். அதனால்தான் ஒரே அறையில் பலர் இருந்தாலும், சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாகத் தேடி வந்து கடிக்கின்றன.

அப்படியென்றால், கொசுக்கள் யாரை அதிகம் விரும்புகின்றன? உங்களை மட்டும் குறிவைத்துக் கடிப்பதற்கு என்ன காரணம்? இதற்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான அறிவியல் உண்மைகளை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

28
தனித்துவமான வாசனை

உடலில் இருந்து வெளிப்படும் தனித்துவமான வாசனை

இதுதான் முக்கியமான காரணங்களில் ஒன்று. ஒவ்வொருவருடைய சருமத்திலும் இயற்கையாகவே ஒருவிதமான வாசனை வெளிப்படுகிறது. வியர்வை, சருமத்தில் வாழும் நுண்ணுயிரிகள் மற்றும் சருமம் உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்கள் ஆகியவை இணைந்து இந்த வாசனையை உருவாக்குகின்றன.

குறிப்பாக, சருமத்தில் காணப்படும் Carboxylic Acids (கார்பாக்சிலிக் அமிலங்கள்) என்ற வேதிப்பொருட்கள் கொசுக்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 2022 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், கொசுக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்களின் சருமத்தில் கார்பாக்சிலிக் அமிலங்களின் அளவு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

38
கார்பன் டை ஆக்சைடு

நீங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு

நாம் சுவாசிக்கும்போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம். இதை கொசுக்களால் உணர முடியும். ஒருவர் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை வெளியிடும்போது, அவரை நோக்கிக் கொசுக்கள் ஈர்க்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கலாம்.

குறிப்பாக,

உடல் அளவு அதிகமாக இருப்பவர்கள்

உடல் அளவு அதிகமாக இருப்பவர்களிடமிருந்து பொதுவாக அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வெளியேற வாய்ப்புள்ளது. நாம் சுவாசிக்கும்போது வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை கொசுக்கள் தங்களுடைய உணர்விகள் மூலம் கண்டறிகின்றன.

2025 ஆம் ஆண்டு வெளியான The Sensory Arsenal Mosquitoes Use to Find Us என்ற ஆய்வுக் கட்டுரையில், மனிதர்களிடமிருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடை சுமார் 10 முதல் 15 மீட்டர் தொலைவிலிருந்தே கொசுக்களால் உணர முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

48
உடற்பயிற்சி

உடல் செயல்பாடுகள் அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு இருப்பவர்கள்

உடற்பயிற்சி செய்யும்போது நமது உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடு அதிகரிக்கிறது. இதனால் சுவாசத்தின் வேகமும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றமும் அதிகரிக்கலாம். அதேபோல், வியர்வை மூலம் உருவாகும் சில வேதிப்பொருட்களும் கொசுக்களை ஈர்க்கக்கூடும்.

2019 ஆம் ஆண்டு வெளியான Hold your breath – Differential behavioral and sensory acuity of mosquitoes to acetone and carbon dioxide ஆய்வில், மனிதர்கள் மூச்சுவிடும்போது வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் அசிட்டோன் ஆகியவை கொசுக்களைக் கவர்வதில் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, இந்த இரண்டு வேதிப்பொருட்களும் இணைந்து ஏடிஸ் வகைக் கொசுக்களை மனிதர்களை நோக்கி ஈர்க்கக்கூடும் என ஆய்வு விளக்குகிறது. இதனால், உடற்பயிற்சிக்குப் பிறகு அதிகமாக மூச்சுவிடும்போது கொசுக்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு அதிகரிக்கலாம்.

58
வெப்பநிலை

உடல் வெப்பநிலை

கொசுக்கள் மனிதர்களை அடையாளம் காண வாசனையை மட்டும் நம்புவதில்லை. உடல் வெப்பத்தையும் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, ஒருவருக்கு அருகில் செல்லும்போது வெப்பம் மற்றும் ஈரப்பதம் போன்ற சமிக்ஞைகளை கொசுக்கள் உணர்கின்றன.

2024-ல் NIH வெளியிட்ட ஆய்வுத் தகவலின்படி, ஏடிஸ் வகைக் கொசுக்கள் மனித உடலில் இருந்து வெளிப்படும் அகச்சிவப்பு வெப்பக் கதிர்வீச்சையும் உணர்ந்து மனிதர்களைக் கண்டறிய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

68
கர்ப்பிணிப் பெண்கள்

கர்ப்பிணிப் பெண்களை கொசுக்கள் அதிகம் கடிக்குமா?

சில ஆய்வுகள் கர்ப்பிணிப் பெண்களை கொசுக்கள் அதிகம் ஈர்க்கக்கூடும் எனக் குறிப்பிடுகின்றன.

இதற்கு முக்கியமாக இரண்டு காரணங்கள்

  • கர்ப்ப காலத்தில் சுவாசத்தின் அளவு அதிகரிப்பதால் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் அதிகரிக்கலாம்.
  • உடல் வெப்பநிலை மற்றும் உடலின் இயற்கையான மாற்றங்களும் கொசுக்களின் ஈர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
78
கருமையான ஆடைகள்

கருமையான ஆடைகளை அணிவதும் கொசுக்கடிக்கு காரணமா?

கொசுக்கள் மனிதர்களைக் கண்டறிய வாசனை மற்றும் கார்பன் டை ஆக்சைடு மட்டுமின்றி பார்வை சார்ந்த சமிக்ஞைகளையும் பயன்படுத்துகின்றன. கருமையான ஆடைகளை அணிவதும் சில வகைக் கொசுக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும்.

2022 ஆம் ஆண்டு வெளியான “The olfactory gating of visual preferences to human skin and visible spectra in mosquitoes” என்ற ஆய்வில், ஏடிஸ் எஜிப்டை (Aedes aegypti) வகைக் கொசுக்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் கருப்பு போன்ற அடர் நிறங்களை நோக்கி ஈர்க்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை உணர்ந்த பிறகே இந்த நிறங்களை நோக்கி அவற்றின் ஈர்ப்பு அதிகரித்தது. எனவே, வெளியில் செல்லும்போது வெள்ளை, காக்கி போன்ற வெளிர் நிற ஆடைகளைத் தேர்வு செய்வது நல்லது.

88
பெண் கொசு Vs ஆண் கொசு

பெண் கொசுக்கள் மட்டும்தான் மனிதர்களைக் கடிக்குமா?

பொதுவாக மனிதர்களைக் கடித்து ரத்தம் உறிஞ்சுவது பெண் கொசுக்கள்தான். இதற்குப் பின்னால் முக்கியமான இனப்பெருக்கக் காரணம் உள்ளது.

2022 ஆம் ஆண்டு வெளியான “Methods to Assess Blood and Nectar Meals in Aedes aegypti Mosquitoes” என்ற ஆய்வுக் கட்டுரையில், ஆண் கொசுக்கள் மற்றும் பெண் கொசுக்கள் இரண்டுமே பூக்களின் தேனை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

ஆனால், ஆண் கொசுக்கள் பெரும்பாலும் பூக்களின் தேன் மற்றும் தாவரச் சாறுகளை உணவாக எடுத்துக்கொள்கின்றன. பெண் கொசுக்களுக்கு முட்டை உருவாக்குவதற்குத் தேவையான புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளைப் பெற ரத்தம் தேவைப்படுகிறது.

இதற்காகவே அவை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. ஆண் கொசுக்களுக்கு முட்டை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால் அவை ரத்தம் உறிஞ்சுவதில்லை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories