
வீட்டில் செய்து உண்பதே உடலுக்கு நல்லது என்றாலும், ஆசை யாரைவிட்டது தின்பண்டம் வாங்க கடைகளுக்கு போகும் பழக்கம் மக்களிடையே குறையவே இல்லை. சூப்பர் மார்கெட்டுகளில் காற்றடைத்த பண்டங்களை அள்ளிக் கொண்டு வருவோம். நாம் சிப்ஸ் பாக்கெட்டுகள் வாங்கும்போது அதில் சிப்ஸ் கொஞ்சமாகவும், காற்று நிறையவும் இருக்கும். அதை பார்க்கும்போதே ஏமாற்று வேலை என நம்மில் பலருக்கு தோன்றும்.
ஏமாற்று வேலை?
இந்தியாவில் பலருக்கும் பிடித்த நொறுக்குத் தீனியில் முக்கியமானது லேஸ், பிங்கோ போன்ற நிறுவனங்களின் சிப்ஸ்கள் தான். நாம் சாதாரணமாக வாங்கும் மரவள்ளிக்கிழங்கு சிப்ஸ், நேந்திரம் பழம் சிப்ஸ் ஆகிய பாக்கெட்டுகளில் காற்றடைத்து விற்பதில்லை. ஆனால் லேஸ் பாக்கெட் அல்லது பிங்கோ பாக்கெட் நீங்கள் வாங்கினால் அதை பிரிக்கும்போது முதலில் காற்று தான் வரும். பின்னர் நாலந்து சிப்ஸ்கள் கிடைக்கும். இதை ஏமாற்று வேலை என மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இப்படி பேக் செய்வதற்கு பின்பு ஒரு அறிவியல் காரணம் உண்டு.
இதையும் படிங்க: Parenting Tips : உங்கள் குழந்தைக்கு அடிக்கடி சிப்ஸ் வாங்கி கொடுக்கிறீர்களா..? அப்ப அவசியம் 'இத' தெரிஞ்சிகோங்க!
ஏன் அதிக காற்று நிரப்புகிறார்கள்?
சிப்ஸை விட காற்றை அதிகம் நிரப்ப ஒரு சிறப்பு காரணம் உண்டு. இது உண்மையில் மோசடியோ பித்தலாட்டமோ இல்லை. இப்படி சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்புவதை ஸ்லாக் ஃபில் (Slack Fill) என்பார்கள். அதாவது நீங்கள் உண்ணும் சிப்ஸை அது தயாரிக்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது. இது வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த செய்யப்படும் நடவடிக்கை தான். சிப்ஸ் பாக்கெட்டுகள் நாட்டில் ஒரு மூலையில் தயார் செய்யப்பட்டு நாடு முழுக்க விநியோகிக்கப்படுகிறது. இதை கொண்டு செல்லும் போது அட்டைப்பெட்டிக்குள் வைத்து அடுக்கி எடுத்துச் செல்கிறார்கள். இந்த நேரத்தில் பாக்கெட் முழுக்க சிப்ஸ் வைத்தால் வாகனம் செல்லும் வேகத்திற்கு அவை வழியிலேயே நொறுங்கிவிடும். அதன் வடிவமே மாறிவிடும். இதை தவிர்க்கவே காற்று நிரப்பும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
நைட்ரஜன் காற்று தெரியுமா?
சிப்ஸ் பாக்கெட்டுகளில் எவ்வளவு மோதல் நடந்தாலும் அவை உடையாமல் இருக்க காற்று நிரப்புவார்கள். இந்த பாக்கெட்டில் ஏதோ ஒரு காற்று நிரப்பப்படுவதில்லை. அதனுள் நைட்ரஜன் வாயுவை நிரப்புவார்கள். பாக்கெட்டுக்குள் நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயுவை மட்டும் நிரப்பினால் சிப்ஸுடன் அது வினைபுரியும். இதனால் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா உருவாகிவிடும். ஆக்சிஜன் வாயுவால் சிப்ஸின் நிறம் மாறலாம். சில நேரம் சுவையும் மாறி, கெட்டுப்போக வாய்ப்புள்ளது. ஆனால், நைட்ரஜனை வாயு வினைபுரியாது. நாம் பாக்கெட்டை பிரித்து பார்க்கும் வரை சிப்ஸ் கெடாமல், அதே சுவையில் இருக்கும். இதுதான் சிப்ஸ் பாக்கெட்டில் காற்று நிரப்புவதன் பின்னணி.
இதையும் படிங்க: உருளைக்கிழங்கு சிப்ஸ் எப்படி தயாரிக்கிறாங்கன்னு பார்த்திருக்கிங்களா? இந்த வைரல் வீடியோவை பாருங்க..