Birds Facts: பறவைகள் தூங்கும்போது கிளையில் இருந்து ஒருபோதும் விழாது. இது எப்படி சாத்தியம் என யோசித்து இருக்கீற்களா? பறவைகளுக்கு உதவி புரியும் 'டெண்டன் லாக்கிங் மெக்கானிசம்'குறித்து விரிவாக பார்ப்போம்.
நாம் தூங்கும்போது பலமுறை திரும்பிப் படுப்போம். சில நேரங்களில் கட்டிலில் இருந்து கீழே கூட விழுந்துவிடுவோம். ஆனால், ஒரு சின்ன சிட்டுக்குருவியோ அல்லது கிளியோ மெல்லிய மரக்கிளையில் தூங்கினால் கூட கீழே விழுவதில்லை. புயல் அடித்தால் கூட அவை கிளையை கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்றன. அவற்றின் கால்களில் பசை தடவியிருப்பது போலத் தோன்றும். இதற்குப் பின்னால் எந்த மேஜிக்கும் இல்லை, ஒரு சூப்பரான பயாலஜி தான் இருக்கு.
24
இந்த மேஜிக் எப்படி வேலை செய்கிறது?
பறவைகளின் கால்களில் ஒரு ஸ்பெஷலான ஆட்டோமேட்டிக் லாக்கிங் சிஸ்டம் இருக்கு. இதை அறிவியலில் 'Tendon Locking Mechanism' (டெண்டன் லாக்கிங் மெக்கானிசம்) என்று சொல்வார்கள். அதாவது பறவையின் காலின் பின்பகுதியில் ஒரு நீளமான தசைநார் இருக்கும். இது காலின் மேல் தசைப்பகுதியையும் கால் விரல் எலும்புகளையும் இணைக்கிறது. பறவை கிளையில் உட்கார்ந்து முழங்காலை மடக்கும்போது, இந்த தசைநார் தானாகவே டைட் ஆகிவிடும்.
34
பாஸிவ் சிஸ்டம்
நாம் கையில் ஏதாவதொரு பொருளைப் பிடிக்கும்போது கை முட்டி எப்படி மூடிக்கொள்கிறதோ, அதேபோலத்தான் இதுவும். முழங்கால் மடங்கியவுடன், கால் விரல்கள் தானாகவே மரக்கிளையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதற்காகப் பறவை எந்த எனர்ஜியையும் செலவழிக்கத் தேவையில்லை. இது ஒரு 'பாஸிவ் சிஸ்டம்' ஆகும்.
பறவை உட்கார்ந்திருக்கும் வரை இந்த லாக் திறக்காது. தூங்கும்போது தசைகள் தளர்வடைந்தால், இந்த லாக் இன்னும் ஸ்ட்ராங் ஆகிவிடும். அதனால் பறவை எவ்வளவு ஆழ்ந்து தூங்குகிறதோ, அவ்வளவு கெட்டியாகக் கிளையைப் பிடித்துக் கொள்ளும். மனிதர்களைப் போலத் தூக்கத்தில் தசைகள் தளர்ந்து கீழே விழுந்துவிடுவோம் என்ற பயம் அவற்றுக்கு இல்லை.
பறவை மீண்டும் பறக்க நினைக்கும்போது, அது முழங்காலை நேராக்கி எழுந்து நிற்கும். உடனே தசைநார் தளர்ந்து, விரல்களின் லாக் ஓபன் ஆகிவிடும். அதன்பிறகு அது ஈஸியாகப் பறந்து செல்லும். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. பெரும்பாலான பறவைகள் தூங்கும்போது தங்கள் உடலின் எடையை முழுமையாகக் கீழ்நோக்கி இறக்கிவிடும். இதனால் அவற்றின் ஈர்ப்பு மையம் மரக்கிளைக்கு நேர் மேலேயே இருக்கும். இதன் மூலம் அவற்றின் பேலன்ஸ் மிஸ் ஆகாது.
இயற்கையாகவே பறவைகளின் உடலமைப்பு எவ்வளவு கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள்! இந்தச் சின்ன லாக்கிங் சிஸ்டம் இருப்பதால் தான், கீழே விழுந்துவிடுவோம் என்ற பயமே இல்லாமல் அவை மரக்கிளையில் நிம்மதியாகத் தூங்குகின்றன.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.