யார் இந்த மாதா ஹரி? ஜெர்மனி நாட்டுக்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டுக்கு சவாலாக இருந்த நடன மங்கை!!

First Published | Feb 16, 2023, 2:12 PM IST

மாதா ஹரி என்றால் யாருக்கும் அவ்வளவு எளிதில் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. முதலாம் உலகப்போரில் வரலாற்றையே திருப்பி போடும் அளவிற்கு உளவு வேலைகளை பார்த்தவர். தன்னை ஒரு இந்தியர் என்று அறிமுகம் செய்து கொண்டவர். 

தன்னுடைய அழகான உடல் வடிவமைப்பு, நுனி நாக்கில் ஏழு மொழிகளில் பேசும் திறமை என்று தன்னை உலக அரங்கிற்கு வளர்த்துக் கொண்டவர். ஒரு நாட்டுக்கே உளவு வேலை பார்ப்பது, அதுவும் முதலாம் உலகப் போரில் என்றால், திகைக்க வைக்கிறது. ஆனால், சாதாரணமாக அதை சாதித்தார் மாதா ஹரி. பாரீஸ் நகரில் நடனமாடிக் கொண்டு இருந்தார். முதலாம் உலகப் போரின்போது ஜெர்மனி நாட்டினருக்காக இவர் இரவு நேரங்களில் உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.

ஜாவா தீவில் ஹவாய் நடனம் கற்ற இவர் ஒரு கேபரே நடனக்காரர். பாரீஸ் நகரில் நடனம் ஆடி வந்தார். அவ்வாறு நடனம் ஆடும்போது பிரான்ஸ் நாட்டு அதிகாரிகளுடன் நெருக்கமாக பழகி அவர்களிடம் இருந்து ரகசியங்களை கறந்து ஜெர்மனி  நாட்டுக்கு கொடுத்து வந்தார். இவர் தன்னை ஒரு இந்தியர் என்றே அறிமுகம் செய்து கொண்டார்.

Tap to resize

மாதா ஹரி கிண்டர் கார்டன் பள்ளி ஆசிரியராவதற்கு படிப்பை முடித்தார். ஸ்காட்லாந்தை சேர்ந்த டச்சு படை தலைவரான கேப்டன் ருடால்ப் மெக்லியோட் என்பவரை  1895ஆம் ஆண்டில் தனது 19வது வயதில் மாதா ஹரி திருமணம் செய்து கொண்டார். திடீரென தனது கணவரை ஜாவா தீவுக்கு மாற்றிவிட அங்கு சென்றார். 

அங்கு சென்ற பின்னர் மாதாவின் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை பிறந்தனர். மகன் விஷம் வைத்து கொல்லப்பட்டான். மகளை கணவர் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் ஹாலந்து, லண்டன் என்று மாறி மாறி சென்று நடனம் ஆடி  பிரபலமானார்.

1905 ஆம் ஆண்டில், ஒரே நாள் இரவில் பிரபலமானார். ஒரு இளவரசி போன்று தன்னை மேம்படுத்திக் கொண்டார். இவரது மெலிந்த உடல் மற்றும் நளின நடனத்தால் பலரும் இவரது ரசிகர்களாக மாறினர்.

1906ஆம் ஆண்டில் கணவரை விவாகரத்து செய்தார். மாதா ஹரி நடனம் ஆடுவதை கணவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நிர்வாண நடனம் ஆடியதன் மூலம் விரைவில் பிரபலமானார். இதனால் மணமுறிவு ஏற்பட்டது.

மாதா ஹரி தனது கடைசி கவர்ச்சி நடனத்தை மார்ச் 1915 ஆம் ஆண்டில் நிறுத்திக் கொண்டார். அதன் பிறகு அவர் ஒரு பாலியல் பெண்ணாகவும் பிரபலமானார். 
 

முதலாம் உலகப் போரின் போது (1914-1918), ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே மாதா ஹரிஅடிக்கடி பயணம் மேற்கொண்டார். இது நாடுகளுக்கு இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. 1916 ஆம் ஆண்டில் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போது, தான் ஒரு பிரான்ஸ் உளவாளி என்பதை  ஒப்புக்கொண்டார் (அப்போது பிரான்ஸ் உளவாளியாக மாறி இருந்தார்). அவர் பொய் சொல்கிறாளா அல்லது உண்மையைச் சொல்கிறாளா என்பது தெரியாமல் லண்டன் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 1917 ஆம் ஆண்டு, ஜெர்மன் ராணுவம் ஒரு ஜெர்மன் உளவாளியை H-21 என்ற குறியீட்டு எண்ணுடன் அழைத்து வந்தது. இந்த உளவாளி மாதா ஹரியாக இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் உளவுத்துறை கருதி மாதா ஹரியை கைது செய்தது. செயிண்ட்-லாசரே சிறையில் மாதா ஹரி அடைக்கப்பட்டார். 

ஜூலை 25, 1917 ஆம் ஆண்டு, மாதா ஹரி ராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை வழங்கப்பட்டது. அதே ஆண்டில், அக்டோபர் 15 ஆம் தேதி பிரான்ஸ் துப்பாக்கிச் சூடும் படையினரால் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 41. இவர் ஜெர்மன் நாட்டுக்கு உளவாளியாக முன்பு இருந்தார். பின்னர், பிரான்ஸ் நாட்டுக்கு உளவு பார்க்க ஒப்பந்தம் செய்து கொண்டார். அப்போதும் ஜெர்மன் நாட்டுக்குத்தான் விசுவாசமாக மாதா ஹரி இருந்தார். அவர் இறந்த பிறகு, மாதா ஹரியின் உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது.

Latest Videos

click me!