நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், சமீபகாலமாக உலகம் முழுவதும் நாய்க்கடிக்கு ஆளான சம்பவங்கள் நாய் பிரியர்களையும் அதிகாரிகளையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் இந்திய நாட்டில் தடை செய்யப்பட்ட நாய் இனங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.
26
புல்டாக்: இது பிரிட்டிஷில் வாழக்கூடிய ஒருவகை நாய் இனமாகும். இது சுமார் 18–25 கிலோ எடையுடையது. இதனை இந்தியாவில் மட்டுமின்றி, இன்னும் சில நாடுகளிலும் தடை செய்யப்பட்டது. நோர்வே மற்றும் நெதர்லாந்தில் இது இனப்பெருக்கம் செய்வது
சட்டவிரோதமானது.
36
ராட்வீலர்: இந்த நாய்கள் ஜெர்மன் கால்நடைகளை மேய்ப்பது மற்றும் இறைச்சி ஏற்றப்பட்ட வண்டிகளை சந்தைக்கு இழுப்பது போன்ற வேலைகளுக்கு உபயோகப்படுகின்றன. இதன் எடை 50 முதல் 60 கிலோ வரை ஆகும்.
நியோபோலிடன் மஸ்தீப்: இது இத்தாலியின் பாரம்பரிய பாதுகாப்பு நாய் இனமாகும். இதன் எடை 50-70 கிலோ ஆகும். இது இந்தியா உட்பட 12 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
டெரியர்: இந்த வகை நாய்கள் பூச்சிகளை வேட்டையாடுவதற்காக வளர்க்கப்படுகிறது. இதன் வகையில் பல இனங்கள் பல விதங்களில் இருக்கின்றது. இது 1 கிலோவிலிருந்து 60 கிலோ அளவில் வேறுபடுகின்றது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.