சர்வேயின் முடிவுகள் வெளியானபோது, ஒட்டுமொத்த இந்தியாவிலும் சென்னை நகரம் 72% மதிப்பெண்களுடன் "மிகவும் நேர்மையான ஜோடிகள் வாழும் நகரம்" என்ற பெருமையைப் பெற்று முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இதற்கு சென்னை ஜோடிகளிடம் காணப்பட்ட சில முக்கிய குணங்கள் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
மொபைல் போன் ரகசியம் இல்லை: டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் 80%-க்கும் அதிகமானோர் தங்களின் பார்ட்னருக்குத் தெரியாமல் மொபைல் பாஸ்வேர்டை மாற்றுவதாகவும், சாட்களை மறைப்பதாகவும் ஒப்புக்கொண்டனர். ஆனால், சென்னையில் 65%-க்கும் அதிகமான ஜோடிகள் தங்களுக்குள் மொபைல் பாஸ்வேர்டுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும், ரகசியங்கள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
வெளிப்படையான கடந்த காலம் (Past Life): தங்களுடைய பழைய காதல் கதைகள் அல்லது கடந்த காலத்தைப் பற்றி தற்போதைய பார்ட்னரிடம் மறைக்காமல் கூறுவதில் சென்னை இளைஞர்கள் அதிக நேர்மையைக் கடைப்பிடிக்கின்றனர்.
பண விஷயங்களில் வெளிப்படைத்தன்மை: சம்பளம், கடன் மற்றும் குடும்பச் செலவுகள் குறித்த விபரங்களை சென்னை ஜோடிகள் ஒருவருக்கொருவர் மறைப்பதில்லை என்பது இந்த சர்வேயில் தெரியவந்துள்ளது.