நான் இறந்த ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
உயிருடன் பிறந்த ஜீவராசிகள் என்றாவது ஒருநாள் மடிந்து தான் ஆக வேண்டும். ஆனால் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரும் அல்லது இறந்த பின்னரும் என்ன நடக்கும் என்கிற பலவிதமான சந்தேகங்களும் குழப்பங்களும் நம்மில் பலருக்கு இருக்கிறது. நாம் இறந்த பிறகு என்ன நடக்கும்? இறக்கும் தருவாயில் நம் மூளை என்ன மாதிரியான நினைவுகளை கொண்டு வரும்? மூளை பழைய நினைவுகளை நினைவு கூறுமா? அல்லது என்ன மாதிரியான நினைவுகள் வரும்? எத்தனை நிமிடங்களுக்கு இது நடக்கும்? என்கிற பல்வேறு கேள்விகளுக்கு உளவியல் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
25
‘லாஸ்ட் பர்ஸ்ட் ஆஃப் பிரைன் ஆக்டிவிட்டி’
மனிதனின் இறப்பை இதயத்தின் செயல்பாடு நிறுத்துவதன் மூலம் நம்மால் கண்டறிய முடியும். ஆனால் மனிதன் இறந்த பிறகும் ‘லாஸ்ட் பர்ஸ்ட் ஆஃப் பிரைன் ஆக்டிவிட்டி’ என்று சொல்லக்கூடிய நரம்பியல் உந்துதல் நடைபெறுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆய்வில் இதயம் வேலை செய்வதை நிறுத்துவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரும், பின்னரும் காமா அலைவுகள் என்று அழைக்கப்படும் ஒரு நரம்பியல் அலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த அலைவுகள் நாம் உயிருடன் இருக்கும் பொழுதே நடைபெறும் நரம்பியல் செயல்பாடுகளை விட அதீத வேகத்துடன் நடந்துள்ளது. இது நம் வாழ்நாள் முழுவதும் நடந்த நினைவுகளின் ஃப்ளாஷ் பேக்குகளுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
35
‘லைவ் ரிவ்யூ பினாமினா’
இது மட்டுமில்லாமல் ‘லைவ் ரிவ்யூ பினாமினா’ என்று சொல்லக்கூடிய நிகழ்வும் இறப்பதற்கு முன்னர் நடக்கிறது. நம் வாழ்நாளில் நடைபெற்ற இனிமையான நிகழ்வுகள், மறக்க முடியாத சந்தர்ப்பங்கள் ஆகியவை அந்த நேரத்தில் நம் கண் முன் ஒரு வெளிச்சம் போல வந்து செல்லும். இது போன்ற நரம்பியல் செயல்பாடுகள் காரணமாக உடல் மகிழ்ச்சி ஹார்மோன்களான டோபோமைன் மற்றும் செரோடனின் ஆகியவற்றை வெளியிடும். இதன் காரணமாக நம் மனதிற்கு மகிழ்ச்சியை தந்தவர்களின் நினைவுகள் நம் கண் முன் வந்து செல்லும். நாம் இறந்த பின்னர் சுமார் ஏழு நிமிடங்களுக்கு நரம்பியல் செயல்பாடுகளின் மூலமாக இந்த நினைவுகள் நமக்கு வந்து செல்லும். இதைத்தான் ‘தி லாஸ்ட் ஸ்வீட்டஸ்ட் 7 மினிட்ஸ்’ என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதயம் துடிப்பதை நிறுத்தியவுடன் மூளைக்கு ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் செல்வது நின்றுவிடுகிறது. இருப்பினும் மூளை உடனடியாக இறந்து விடுவதில்லை. மருத்துவ ரீதியாக மரணித்து மீண்டும் உயிர் பிழைத்தவர்கள் சுயநினைவை இழந்த அந்த நேரத்தில் தீவிரமான தெளிவான அனுபவங்களை பெற்றதாக கூறுகின்றனர். உதாரணமாக சுரங்கப்பாதை வழியாக ஒளியை நோக்கி செல்வது, இறந்த உறவினர்களை காண்பது, தங்கள் வாழ்க்கையை ஒரு நொடியில் பிளாஷ்பேக் போல பார்ப்பது போன்ற அனுபவங்களை குறிப்பிடுகின்றனர். இந்து மதம், பௌத்தம் போன்ற சில மதங்களில் இருக்கும் தருவாயில் முக்கிய நிகழ்வுகள் அல்லது கர்ம வினைகள் தங்கள் கண் முன் தோன்றும் என நம்பப்படுகிறது. இது மரணத்திற்கு பிந்தைய பயணத்திற்கான தயாரிப்பு என கருதப்படுகிறது.
55
புரிந்து கொள்ள முடியாத புதிர்
சுருக்கமாக சொன்னால் இறந்த பின்னர் நடக்கும் ‘தி லாஸ்ட் 7 மினிட்ஸ்’ என்பது உடல் ரீதியான மரணத்திற்கு பின்னர் மூளையில் நடக்கும் சில விசித்திரமான செயல்பாடுகளையும், அதன் விளைவாக ஏற்படும் சில அனுபவங்களையும் குறிக்கிறது. இது அறிவியல், தத்துவம், ஆன்மீகம் ஆகிய மூன்று நம்பிக்கைகளுக்கும் நடுவில் நிற்கும் ஒரு புதிரான நிகழ்வாகும். இந்த நிகழ்வை புரிந்து கொள்ள மேலும் பல ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.