இந்த வாரம் முழுவதும் எந்த நேரமும் காதலில் கில்லாடியாக இருக்கும் 5 ராசிகள்..உங்கள் துணையின் ராசி இதில் இருக்கா?

First Published | Oct 16, 2022, 3:34 PM IST

Love Horoscope 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, ஒருவரின் வாழ்வில் உறவு என்று வரும்போது, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு வித குண நலன்கள் இருக்கும். அப்படியாக, இந்த 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23 வரை, எந்தெந்த ராசிகளுக்கு காதல் உறவு அமோகமாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Love Horoscope 2022:

மேஷம்

இந்த வாரம் நீங்கள், திடீரென்று ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு அதிகம், இந்த வாரம், மேஷம் ராசிக்காரர்கள் மிகவும் உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள். மேலும், காதலுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள். இந்த வாரம், உங்கள் திருமண வாழ்க்கை தொடர்பான எந்த முக்கிய முடிவுகளிலும் உங்கள் மனைவியின் தாயிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

Love Horoscope 2022:

ரிஷபம்

இந்த வாரம் உங்கள் அன்புக்குரியவர் மீது உங்கள் அன்பை காட்ட வேண்டும். ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் ரொமாண்டிக்கானவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களுடன் இருக்கும்போதெல்லாம் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார்கள். வாழ்க்கையின் இந்த நேரம் உங்களுக்கு திருமண வாழ்க்கையின் முழு மகிழ்ச்சியைத் தரும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு..ரிஷபம் ராசிக்கு பெருமை, கன்னி ராசிக்கு செல்வம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்

Tap to resize

Love Horoscope 2022:

மிதுனம்:

இந்த வாரம் ஐந்தாம் வீட்டில் கேது அமைந்திருப்பதால், உங்களை நீங்கள் கட்டுப்படுத்தி, உங்கள் துணைக்கு இடையே மூன்றாவது நபர் வருவதைத் தடுக்க வேண்டும். மேலும், உங்கள் காதல் உறவில் ஏதேனும் சிக்கல் இருந்தால், அதைப் பற்றி மூன்றாவது நபரிடம் சொல்ல வேண்டாம். ஏனென்றால், இந்த நேரத்தில் அவர்களிடமிருந்து முழு ஒத்துழைப்பையும் நீங்கள் பெற முடியாது.

Love Horoscope 2022:

மகரம்

காதல் என்பது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு உணர்வு ஆகும். இந்த நேரத்தில் நீங்கள் காதல் கடலில் மூழ்குவதையும் காணலாம். இந்த நேரத்தில் உங்கள் துணை  உங்களுக்கு உடல் ரீதியாக நெருக்கம் இல்லாமல் போனாலும், மனரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் உங்களுக்கு மிகவும் நெருக்கமாக இருப்பார். உங்கள் காதல் துணையை சந்தித்து பேசும் போது, இந்த நேரத்தில் உங்கள் முகத்தில் புன்னகையை காணலாம்.

Love Horoscope 2022:

மீனம்:

இந்த நேரம் திருமணனத்திற்கு பிறகு, உங்கள் துணையைத் தவிர வேறு ஒருவருடன் நீங்கள் காதல் உறவில் ஈடுபட்டால், உங்கள் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல், அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில்,இந்த நேரத்தில்உங்கள் துணை எப்போதும் ரொமான்ஸ் செய்ய காத்திருக்கும் உணர்ச்சிமிக்க காதலர்கள் ஆவார்கள்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு..ரிஷபம் ராசிக்கு பெருமை, கன்னி ராசிக்கு செல்வம்..உங்கள் ராசிக்கு என்ன பலன்

Latest Videos

click me!