
பழங்களில் அத்தியாவாசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவை அனைத்தும் நம்முடைய ஒட்டு
மொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். அந்த வகையில், நாம் சில சமயங்களில் பழங்களை நறுக்கிய பிறகு அதை சாப்பிடாமல் மறந்து விடுவோம். இதனால் சில நேரங்களில் அது நிறம் மாறிவிடும். மேலும் நிறம் மாறிய பழங்களை நம்மில் பலர் சாப்பிடாமல் குப்பையில் போட்டு விடுவோம். இத்தகைய சூழ்நிலையில் நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நறுக்கிய பழங்கள் நிறம் மாறுவதற்கான காரணங்கள்:
நறுக்கிய பழங்கள் நிறம் மாறுவதற்கு முக்கிய காரணம், அவற்றில் உள்ள நொதிகள் காற்றில் உள்ள அக்ஸிஜனுடன் வினைபுரிய தொடங்குகின்றது. இதனால் பழங்கள் வெட்டிய உடனே சீக்கிரமாக நிறம் மாறிவிடுகிறது.
இதையும் படிங்க: இந்த '5' பழங்கள் சாப்பிட்டால் குளிர்காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனையே வராது!
நறுக்கிய பழங்கள் நிறம் மாறாமல் தடுக்க சில டிப்ஸ்:
வினிகர்:
தண்ணீரில் வினிகர் கலந்து அதில் பழங்களை சில நிமிடம் போட்டு வைத்தால் பழங்கள் வெட்டிய பிறகும் பிரஷாகவே இருக்கும். ஏனெனில் வினிகளில் இருக்கும் ஆசிட் பழம் வெட்டி பிறகு நிறம் மாறுவதை தடுக்கிறது.
உப்பு தண்ணீர்
இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கொஞ்சமா உப்பு சேர்த்து பழங்களை சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இதனால் பழங்கள் நிறம் மாறுவது மெதுவாக கூடும். அதுவும் குறிப்பாக இந்த டிப்ஸ் ஆப்பிள் பழத்திற்கு ரொம்பவே பொருந்தும்.
தேன்:
பழங்களின் நிறம் மாறுவதை தடுக்க பழங்களின் மீது தேனை தடவலாம் அல்லது ஊற்றலாம். இப்படி செய்தால் பழங்களில் காற்று படுவது தடுக்கப்படும் மற்றும் பழங்கள் பிரஷாகவும் இருக்கும்.
எலுமிச்சை சாறு:
நறுக்கிய பல துண்டுகள் மீது எலுமிச்சை சாறு பிழிந்தால் பழங்கள் நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். இப்படி செய்தால் பழத்தின் சுவை மாறிவிடும் என்பதால் பலத்தை சாப்பிடுவதற்கு முன்பாக தண்ணீரில் அலசவும்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் பிரிட்ஜில் வைத்த காய்கறி சீக்கிரமே அழுகி போகுதா? 'இந்த' டிப்ஸ் ட்ரை பண்ணுங்க!
வெட்டிய பழங்களை சேமிப்பது எப்படி?
- வெட்டிய பழங்களை காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து சேமிக்கலாம். இப்படி செய்தால் ஆக்சிஜன் வெளிப்பாடு குறைவாகவே இருக்கும். இதனால் பழங்கள் நிறம் மாறாமல் பிரஷ்ஷாகவே இருக்கும். லெமன், பெர்ரி போன்ற பழங்களை இந்த முறையில் சேமிக்கலாம்.
- பழத்தின் ஒரு பகுதியை மட்டும் நீங்கள் பயன்படுத்தி இருந்தால் மீதமுள்ள பகுதியை பிளாஸ்டிக் கவரில் காற்று புகாதப்படி இறுக்கமாக கட்டி சேமிக்கலாம்.
குறிப்பு: பொதுவாக ஆப்பிள் பழம் வெட்டிய சில நிமிடங்களிலேயே அவற்றின் நிறம் மாறிவிடும். இதற்கு ஆப்பிளில் இருக்கும் எத்திலீன் வாயு தான். எனவே ஆப்பிளை வெட்டி பிறகு முடிந்தவரை உடனே சாப்பிடுங்கள். மேலும் அதை மற்ற பழங்களுடன் வைத்தால் அவற்றின் நிறமும் மாறிவிடும் என்பதால், ஆப்பிளை சேமிக்கும் போது தனியாக சேமிப்பது தான் நல்லது.