குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துபவரா நீங்கள்! தப்பி தவறி கூட இந்த தப்பை செய்திடாதீங்க!

Published : Dec 22, 2024, 08:05 PM IST

Water Heater Rod Safety Tips: குளிர் காலத்தில் சுடுநீரில் குளிக்க வாட்டர் ஹீட்டர்கள் உதவியாக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும்போது முன்னெச்சரிக்கை அவசியம். 

PREV
15
குளிர்காலத்தில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துபவரா நீங்கள்! தப்பி தவறி கூட இந்த தப்பை செய்திடாதீங்க!
Water Heater Rod

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் குளிர் காலம் துவங்கியுள்ளது. குளிர் காலத்தில் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளிக்க பலரும் தயங்குவார்கள். இதனால் சுடு தண்ணீரில் குளிக்கவே விரும்புவர். முன்பெல்லாம் விறகடுப்புகளில் வெந்நீர் வைத்துக் குளித்து வந்தனர். அதன் பின்னர் கேஸ் அடுப்புகள் மூலம் வெந்நீர் வைக்க ஆரம்பித்தோம். ஆனால் வீட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் தினமும் அதனைப் பயன்படுத்தி வெந்நீர் வைத்தால் சிலிண்டர் விற்கிற விலைக்கு ஒரே வாரத்தில் கேஸ் தீர்ந்து விடும்.

25
Water Heater

இதற்கான ஒரு தீர்வாகவே குறைந்த விலையில் சூடாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளாத எலக்ட்ரிக் வாட்டர் ஹீட்டர்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இது உபயோகிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறது. அதிக விலை கொடுத்து வீட்டில் கீசர் அல்லது சோலார் வாட்டர் ஹீட்டர் வாங்க முடியாதவர்கள் அதிக அளவில் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

35
Water Heater Rod Safety Tips

ஆனால் மலிவான விலையில் விற்கும் வாட்டர் ஹீட்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது நீங்கள் எச்சரிக்கையுடன் மற்றும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் உயிரிழப்பு ஏற்படும். 

45
plastic bucket

வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது என்னவெல்லாம் செய்யக்கூடாது

வாட்டர் ஹீட்டர்களை குளியலறையில் வைத்து பயன்படுத்த கூடாது. அது ஈரமான பகுதி என்பதால் ஷாக் ஏற்படும் அபாயம் உள்ளது. வாட்டர் ஹீட்டர் கம்பி முழுவதுமாக தண்ணீரில் மூழ்கிய பிறகு அதனை இயக்குவது அவசியம்.

55
water heater maintenance and safety tips

தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தண்ணீரில் விரலை வைத்து பார்க்க கூடாது. இதனால் ஷாக் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். வாட்டர் ஹீட்டரை அணைத்து 10 நிமிடங்களுக்குப் பிறகு ஹீட்டர் ராடை தண்ணீரில் இருந்து அகற்றுவது நல்லது. பிளாஸ்டிக் வாளிகளில் வாட்டர் ஹீட்டரை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. இதனால் வெடிக்கும் அபாயம் அதிகம். அதேபோல் இரும்பு வாளிகளில் வைத்து ஹீட்டரை பயன்படுத்த கூடாது. இதற்குப் பதிலாக எஃகு, அலுமினியம் அல்லது மற்ற உலோகப் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

click me!

Recommended Stories