3. உதடுகள் தான் முதல்ல தெரிஞ்சதா?
மரமும் தெரியல, வேரும் தெரியல... எடுத்த உடனே உங்க பார்வை உதடுகள்ல தான் நின்னது அப்படின்னா, நீங்க 'கூலான' உலகத்துல வாழ்ற அமைதியான மனிதர் (Easy-going). 'வாழ்க்கை எந்தப் பக்கத்துல போகுதோ அப்படியே போவோம்'னு போய்க்கிட்டே இருப்பீங்க. எந்த ஒரு இக்கட்டான சூழல் வந்தாலும் டக்குனு பதற்றப்படவே மாட்டீங்க. டென்ஷனான நேரங்களிலும் அமைதியா இருக்குற வித்தை உங்களுக்கு கைவந்த கலை. அதனாலயே உங்களோட பேசும்போதும், கூட இருக்கும்போதும் மத்தவங்களுக்கு மனசுக்குள்ள ஒரு தனி நிம்மதியும் சௌகரியமும் கிடைக்கும். உங்களுடைய இந்த அமைதியும் ரிலாக்ஸ் தன்மையும்தான் உங்க மிகப்பெரிய பலம்.
அதிகப்படியான கூல் மனநிலை சில நேரங்களில் சவாலா மாறலாம். கடுமையான ரூல்ஸ், நீண்ட நாள் பிளான் பண்றதெல்லாம் உங்களுக்கு பிடிக்காது. ஆனா, உங்க மனசுல தோன்றும் அருமையான ஐடியாக்களை நிஜமாக்க கொஞ்சமாவது திட்டமிடலும் சின்ன வரைமுறையும் தேவை. அது உங்க நிம்மதியைக் கெடுக்காம உங்களை வெற்றிப்பாதைக்குக் கூட்டிட்டுப் போகும். கிரியேட்டிவ் ரைட்டர், ஆர்ட்டிஸ்ட், இசைக் கலைஞர், யோகா மாஸ்டர், சோசியல் வொர்க்கர், டிராவல் பிளாக்கர், ஃபிட்னஸ் ட்ரெய்னர், குழந்தைகள் பராமரிப்பாளர்.
எப்படி... உங்க மனசை இந்த ரிசல்ட் அப்படியே படம் பிடிச்சு காட்டுதா? இந்த மாதிரி ஆப்டிகல் இல்யூஷன் டெஸ்ட்டுகள் யாரையும் எடை போடுவதற்காக அல்ல; நம்மையும் அறியாம நம்ம ஆழ்மனசுக்குள்ள ஒளிஞ்சிருக்கும் பலத்தை நாமளே புது கோணத்துல தெரிஞ்சுக்கிறதுக்கான சுவாரசியமான வழிதான்!