Breakup Recovery: லவ் ஃபெயிலியர் வலியில இருக்கீங்களா? பிரேக்கப்ல இருந்து வெளில வர 3 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்

Published : Oct 28, 2026, 07:36 PM IST

Breakup Recovery: உயிரா காதலிச்சவங்க உங்களை விட்டுட்டு போயிட்டாங்களா? லவ் ஃபெயிலியர் வலியில துடிச்சிட்டு இருக்கீங்களா? அந்த வலியில இருந்து வெளில வர இந்த 3 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸை ஃபாலோ பண்ணுங்க. கண்டிப்பா நீங்க மீண்டு வருவீங்க.

PREV
14
பிரேக்கப் வலியில இருந்து தப்பிக்கிறது எப்படி?

காதல் எவ்ளோ அழகோ, அந்த காதல் பிரியுறப்போ வர்ற வலி ரொம்ப கொடூரமானது. பிரேக்கப் ஒருத்தரை மனசளவிலும் உடலளவிலும் ரொம்பவே பாதிக்கும். பழைய நினைவுகள், விரக்தி, டிப்ரஷன் எல்லாம் சேர்ந்து அன்றாட வாழ்க்கையையே முடக்கிடும். ஆனா, இந்த மன உளைச்சல்ல இருந்து வெளில வந்து வாழ்க்கையில முன்னுக்கு வர்றது ரொம்ப முக்கியம். பிரேக்கப் வலியில இருந்து மீண்டு வர மருத்துவர்கள் சொல்ற 3 ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்னனு தெரிஞ்சுக்கலாம்.

24
நோ கான்டாக்ட் ரூல் (No Contact Rule)

பிரேக்கப் ஆன உடனே பலரும் பண்ற பெரிய தப்பு, எக்ஸ் பார்ட்னரை திரும்பவும் காண்டாக்ட் பண்ண நினைக்கிறது தான். போன் பண்றது, மெசேஜ் பண்றது, அவங்க சோஷியல் மீடியாவை அடிக்கடி செக் பண்றது வலியை அதிகமாக்குமே தவிர குறைக்காது.

என்ன பண்ணனும்? அவங்க கூட எந்த தொடர்பும் இல்லாம கட் பண்ணிடுங்க. போன் நம்பரை டெலீட் பண்ணுங்க. சோஷியல் மீடியால அன்பாலோ அல்லது பிளாக் பண்ணுங்க. இந்த 'நோ கான்டாக்ட்' ரூல் மூலமா, அவங்க இல்லாத புது வாழ்க்கைக்கு உங்க மூளை பழகிக்கும்.

34
பழைய நினைவுகளை அழிப்பது

கண்ணு முன்னாடி பழைய நினைவுகள் இருக்குற வரைக்கும் மனசு ஆறுதல் அடையாது. அவங்க கொடுத்த கிஃப்ட், சேர்ந்து எடுத்த போட்டோ, லெட்டர், மெசேஜ் எல்லாமே ஒவ்வொரு நிமிஷமும் வலியை ஞாபகப்படுத்தும்.

என்ன பண்ணனும்? உங்க பர்சனல் ஸ்பேஸ்ல இருந்து பழைய நினைவுகளை தூக்கி எறிஞ்சிடுங்க. போன்ல இருக்குற பழைய போட்டோ, சாட் எல்லாத்தையும் டெலீட் பண்ணுங்க. இப்படி பண்றதால உங்க மனசுக்கு நிம்மதி கிடைக்கும். கொஞ்சம் கொஞ்சமா நிகழ்காலத்துல வாழ ஆரம்பிப்பீங்க.

44
எதிர்காலத்துல கவனம் செலுத்துங்க (Self-Care & Self-Improvement)

ஒருத்தர் போயிட்டா வாழ்க்கை முடிஞ்சிடாதுனு நீங்க மொதல்ல புரிஞ்சுக்கணும். அழுதுட்டே இருக்குறதால உங்க உடல், மன ஆரோக்கியம் தான் கெட்டுப்போகும். இந்த நேரத்துல உங்களை நீங்க மதிக்கவும் நேசிக்கவும் கத்துக்கணும்.

என்ன பண்ணனும்? உங்க தினசரி ரொட்டீனை மாத்துங்க. தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் பண்ணுங்க. இது மூளையில சந்தோஷத்தை கொடுக்குற எண்டோர்பின் ஹார்மோனை சுரக்க வைக்கும். புது ஸ்கில்ஸ் கத்துக்கோங்க. கெரியர்ல ஃபோகஸ் பண்ணுங்க. குடும்பம், நண்பர்கள் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுங்க.

ஃபைனலா...

பிரேக்கப்க்கு அப்புறம் கஷ்டமா இருக்குறது சகஜம் தான். ஆனா அதுலயே முடங்கிட கூடாது. காலம் எல்லா காயத்தையும் ஆத்தும், ஆனா அதுக்கு நாம சரியான முடிவுகளை எடுக்கணும். இந்த 3 ரூல்ஸை ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணி வாழ்க்கையில ஸ்ட்ராங்கா முன்னுக்கு வாங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories