வீட்டில் செல்வம் நிலைக்க பாத்ரூம் வாஸ்து ரொம்ப முக்கியம். வாஸ்து சாஸ்திரப்படி, பாத்ரூமில் சில பொருட்களை வைப்பது நெகட்டிவ் எனர்ஜியை உண்டாக்கி, வீட்டு உறுப்பினர்களின் முன்னேற்றத்தை தடுக்கும். அந்தப் பொருட்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
வீட்டுக்கு வாஸ்து பார்க்கும்போது கிச்சன், பெட்ரூமுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் பாத்ரூமுக்கு கொடுப்பதில்லை. ஆனால், வாஸ்து சாஸ்திரப்படி, பாத்ரூமில் இருக்கும் சில பொருட்கள் வீட்டில் நெகட்டிவ் எனர்ஜியை அதிகமாக்கும். இதனால் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சி தடைபடலாம். அந்தப் பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க.
28
1. உடைந்த கண்ணாடி (Broken Mirror):
பாத்ரூமில் கண்ணாடி இருப்பது சகஜம். ஆனால் அது உடைந்தோ, விரிசல் விட்டோ இருக்கவே கூடாது. வாஸ்துப்படி, உடைந்த கண்ணாடி வீட்டுக்குள் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்த்து, மன அமைதியைக் கெடுக்கும்.
38
2. காலியான வாளி (Empty Bucket):
பாத்ரூமில் வாளியை எப்போதும் காலியாக வைக்காதீர்கள். ஒன்று தண்ணீர் நிரப்பி வையுங்கள், இல்லையென்றால் தலைகீழாகக் கவிழ்த்து வையுங்கள். காலியான வாளி, பணப் பற்றாக்குறையின் அறிகுறியாகக் கருதப்படுகிறது. வாஸ்துப்படி, நீல நிற வாளியைப் பயன்படுத்துவது மிகவும் மங்களகரமானது.
தண்ணீர் வீணாவது ஒரு கெட்ட சகுனம். உங்கள் பாத்ரூம் குழாயில் தண்ணீர் சொட்டிக்கொண்டே இருந்தால், உடனே சரி செய்யுங்கள். இப்படி வீணாகும் தண்ணீர், பண விரயத்தைக் குறிக்கிறது. இது லட்சுமி தேவியின் வருகையைத் தடுக்கும் என்று சொல்லப்படுகிறது.
58
4. ஈரமான அல்லது அழுக்குத் துணிகள் (Dirty Clothes):
பாத்ரூமில் நீண்ட நேரம் அழுக்குத் துணிகளைப் போட்டு வைக்காதீர்கள். குளித்த உடனேயே துவைப்பது நல்லது. ஈரத் துணிகளை இரவு முழுவதும் பாத்ரூமில் வைத்திருந்தால், அது ராகு மற்றும் சனியின் ஆதிக்கத்தை அதிகப்படுத்துமாம்.
68
5. குப்பைகள் மற்றும் உடைந்த பொருட்கள் (Junk Items):
பயன்படுத்தாத ஷாம்பு பாட்டில்கள், உடைந்த சோப்பு ஸ்டாண்டுகள் அல்லது பழைய டூத் பிரஷ்களை பாத்ரூமில் சேர்த்து வைக்காதீர்கள். இந்தக் குப்பைகள் வீட்டில் வறுமையைக் கொண்டு வரும்.
78
6. காலணிகள் (Footwear):
வெளியே சென்று வரும் செருப்புகளை பாத்ரூமுக்குள் கொண்டு செல்லாதீர்கள். பாத்ரூமுக்கு என தனியாக பிளாஸ்டிக் செருப்புகளைப் பயன்படுத்துங்கள். வெளியிலிருந்து வரும் தூசியும், அழுக்கும் நெகட்டிவ் எனர்ஜியை வீட்டுக்குள் கொண்டு வரும்.
88
7. அடர் நிறங்கள் (Dark Colors):
பாத்ரூம் சுவர்களுக்கு கறுப்பு அல்லது அடர் பிரவுன் நிற டைல்ஸ்களைப் பயன்படுத்தாதீர்கள். எப்போதும் வெள்ளை, வெளிர் நீலம் அல்லது கிரீம் போன்ற லைட் கலர்களைத் தேர்ந்தெடுங்கள். இது மனதுக்கு இதமாக இருப்பதுடன், பாசிட்டிவ் எனர்ஜியையும் தக்க வைக்கும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.