Valentine's Week 2025 :  காதல் வாரம்.. எந்த நாளில் 'கிப்ட்' கொடுத்தா லவ்வருக்கு பிடிக்கும்

Published : Feb 05, 2025, 12:33 PM IST

Valentine's Week 2025 : பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 வரை காதலர் வாரம் என்று அழைக்கப்படுகிறது. எந்த நாளில் என்னென்ன செய்யனும் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
19
Valentine's Week 2025 :  காதல் வாரம்.. எந்த நாளில் 'கிப்ட்' கொடுத்தா லவ்வருக்கு பிடிக்கும்
Valentine's Week 2025 :  காதல் வாரம்.. எந்த நாளில் 'கிப்ட்' கொடுத்தா லவ்வருக்கு பிடிக்கும்

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்பது அன்பின் வெளிப்படையாகும். இந்த நாள் ஆரம்பமாகும் ஒரு வாரத்திற்கு முன்பே இருந்தே காதலர்கள் ரொம்பவே குஷியாகவே இருப்பார்கள். பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை காதலர்களுக்கான ஸ்பெஷல் வாரம் என்பதால், இந்த 7 நாட்களையும் எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.

29
பிப்ரவரி 7 , ரோஸ் டே :

காதல் வாரத்தின் முதல் நாள் ரோஸ் டே ஆகும். இதை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 7 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் ரோக்கள் கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்துவார்கள். 

39
பிப்ரவரி 8 , ப்ரபோஸ் டே :

காதல் வாரத்தின் இரண்டாவது நாள் ப்ரபோஸ் டே ஆகும். இதை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 8 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அன்பின் வெளிப்பாடு ஆகும். இந்நாளில் தான் நீங்கள் விரும்பும் நபரிடம் உங்களது காதலை வெளிப்படுத்துவதற்கான சிறந்த நாள் ஆகும். முக்கியமாக இந்நாளில் ஒரு அழகான பரிசுடன் உங்களது மனதில் இருக்கும் காதலை குறித்து பேசுங்கள்.

49
பிப்ரவரி 9 , சாக்லேட் டே :

காதல் வாரத்தின் மூன்றுவது நாள் சாக்லேட் டே ஆகும். இதை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் சாக்லேட்டுகளை கொடுத்து, தங்களது காதல் உறவின் இனிமையை வெளிப்படுத்துவார்கள்.

59
பிப்ரவரி 10 , டெடி டே :

காதல் வாரத்தின் நான்காவது நாள் டெடி டே ஆகும். இதை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலன் தான் விரும்பும் பெண்ணிற்கு  டெடி வாங்கி கொடுத்து தங்களது காதலை வெளிப்படுத்தவும். இதனால் அவர்கள் மகிழ்வார்கள்.

69
பிப்ரவரி 11 , வாக்குறுதி டே :

காதல் வாரத்தின் ஜதாவது நாள் வாக்குறுதி டே ஆகும். இதை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 11ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் அளித்த வாக்குறுதிகளை அளித்து, அதை வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதாக உறுதி அளித்துக்கொள்ளுங்கள்.

79
பிப்ரவரி 12 , கட்டிப்பிடி டே :

காதல் வாரத்தின் ஆறாவது நாள் கட்டிப்பிடி டே ஆகும். இதை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. உங்கள் துணையுடன் ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால் இந்நாளில் அவளை கட்டிபிடித்து அவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துங்கள்.

89
பிப்ரவரி 13, கிஸ் டே :

காதல் வாரத்தின் ஏழாவது நாள் முத்த டே ஆகும். இதை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உணர்வுகளை வார்த்தைகள் இல்லாமல் முத்தத்தின் மூலம் வெளிப்படுத்தலாம். இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் முத்தமிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.

99
பிப்ரவரி 14, காதலர் தினம் :

காதலர் தினம் காதல் வாரத்தின் கடைசி நாளாகும். இந்த நாள் காதலர்களுக்கு மிகவும்  சிறந்தது. இந்நாளில் ஜோடிகளும் ஒன்றாக நேரத்தை செலவழிப்பார்கள். மேலும் பரிசுகளை வாங்கி கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்துவார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories