கேரளா
கடவுள்களின் நாடு என்று அழைக்கப்படும் அழகிய கேரளாவில் பார்த்து பார்த்து வியக்க பல இடங்கள் உள்ளது. குறிப்பாக புதுமண தம்பதிகள், தங்கள் தேனிலவை கொண்டாட ஆலப்புழாவிலும், கேரளாவின் இன்னும் பல இடங்களிலும் தயார் நிலையில் காத்திருக்கிறது படகுகள். இதனை பொதுவாக House Boats என்று அழைப்பார்கள்.
இந்த House Boats மட்டுமல்லாமல் இன்னும் ஆயிரக்கணக்கான இடங்கள் கேரளாவை சுற்றி அமைந்திருக்கிறது.
வரலட்சுமி விரதம் 2023: தேதி, லட்சுமி தேவிக்கான பூஜை மற்றும் முக்கியத்துவம்..!!
மலைகளின் அரசி ஊட்டி
இப்பொது அங்கு சீசன் இல்லை என்றாலும், ஊட்டியின் எழில்கொஞ்சும் அழகை ரசிக ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் மிகவும் அருமையான மாதங்களாகும். குறிப்பாக கூட்ட நெரிசல் இல்லாமல் புதுமண தம்பதிகள் தங்கள் நேரத்தை, கைகோர்த்து செலவிட இது மிகசிறந்த இடமாகும். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வந்து செல்கின்றனர்.
பாண்டிச்சேரி
மழைபொழியும் நேரத்தில் நீங்கள் உங்கள் துணையோடு அழகிய கடற்கரையில் உங்கள் நேரத்தை செலவிட மிகச்சரியான இடம் புதுச்சேரி என்றால் அது மிகையல்ல. வண்ணமிகு சாலைகளுக்கும், அழகிய கடற்கரைகளுக்கும் பெயர் பெற்ற பாண்டிச்சேரி. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்தாலும், தேனிலவு கொண்டாடும் தம்பதிகளுக்கு இது ஒரு மிகசிறந்த இடம்.
கோவா
மழை குறைவாகவும், கொஞ்சம் வெயில் அதிகமாகவும், அதே சமயம் நம்ம பட்ஜெட் பர்ஸை கடிக்காமலும் இருக்க புதுமண தம்பதிகள் தேனிலவை கொண்டாட நிச்சயம் கோவா சென்று வரலாம். Dabolim விமான நிலையம் மற்றும் வாஸ்கோ ரயில்நிலையத்தை நீங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எளிதாக அடையாள. வாடைக்கு வண்டி ஒன்றை எடுத்துக்கொண்டு நீங்கள் நினைக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக சென்று மகிழலாம்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சென்னை மற்றும் இந்தியாவின் பல பெருநகரங்களில் இருந்து அடிக்கடி பல விமானசேவைகளை கொண்ட ஒரு இடம் அந்தமான் நிக்கோபார் தீவுகள். குறிப்பாக அங்குள்ள பல தீவுகளில் ஒன்றுக்கு சென்று, தனிமையில் நேரத்தை கழிக்க புதுமண தம்பதிகளுக்கு மிகவும் உகந்த இடம் அந்தமான் தீவுகள். ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்கு செல்ல பெர்ரி சேவைகளும் இங்கு உண்டு. ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தாலும் நேரத்தை அழகாக செலவிட மிகச்சரியான ஒரு இடம்.
ராகு காலம்? இந்த நேரத்தில் இவற்றை ஒருபோதும் செய்யாதீங்க..!! இழப்பு ஏற்படும்..