கெட்ட கொழுப்பை குறைக்க சமையலறையில் இருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!

First Published Sep 6, 2024, 6:39 PM IST

சமீபத்திய ஆய்வின்படி, சோள மாவு கெட்ட கொழுப்பின் அளவை நிர்வகிக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, சுத்திகரிக்கப்பட்ட சோள மாவு மற்றும் சோளத் தவிடு ஆகியவற்றின் கலவை கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. 

Bad Cholesterol

குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் LDL கொலஸ்ட்ரால் அதாவது "கெட்ட" கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. கெட்ட கொழுப்பும் அதிகரித்தால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் இரத்த நாளங்களில் கொழுப்பு படிவுகள் தமனிகள் வழியாக போதுமான இரத்தம் செல்வதை கடினமாக்குகிறது.

பருமனாக இருப்பது, புகைபிடித்தல், உடல் உழைப்பு இல்லாமை, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்வது, ஆரோக்கியமற்ற கொழுப்புகளை உண்பது ஆகியவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே ஒருவர் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க வேண்டும். 

Bad Cholesterol

ஆனால் அதே நேரம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க ஒரு நல்ல வகையான கொலஸ்ட்ரால் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) என்பது நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சி, உடல் எடையை நிர்வகிப்பது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது ஆகியவை கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த நிலையில் நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கை கொடுள்ளது. ஆம். அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டி விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், சோள மாவு (Corn Flour) கெட்ட கொழுப்பின் அளவை நிர்வகிக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. உயர் கொலஸ்ட்ரால் அளவுகளுடன் போராடுபவர்களுக்கு - சோள மாவு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவ்க்கப்பட்டுள்ளது.

Latest Videos


Corn Flour

இந்த ஆய்வு மூன்று வகையான சோள மாவு - முழு தானிய சோள உணவு, சுத்திகரிக்கப்பட்ட சோள உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோள உணவின் தனித்துவமான சோள தவிடு ஆகியவற்றை வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் உயர் கொலஸ்ட்ரால் அளவு கொண்ட பங்கேற்பாளர்கள் பங்கேற்றனர். பின்னர் பங்கேற்பாளர்கள். சோள மாவு கலந்து ரொட்டிகளை உட்கொண்டனர்.

முடிவுகள் என்ன காட்டியது?

உடலில் கெட்ட கொழுப்பின் அளவு வியத்தகு அளவில் குறைந்ததை இந்த ஆய்வு முடிவுகள் காட்டியது. பங்கேற்பாளர்களில் சுமார் 5 சதவிகிதம் கெட்ட கொழுப்பு குறைந்ததும் நிரூபணமானது. சில பங்கேற்பாளர்களுக்கு, 13 சதவீதம் என்ற அளவில் கூட கெட்ட கொழுப்பு குறைந்ததும் கண்டறியப்பட்டது.

Corn Flour

முழு தானியங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோள உணவுகள் கொலஸ்ட்ரால் அளவுகளில் சிறிதளவு விளைவைக் காட்டினாலும், சுத்திகரிக்கப்பட்ட சோள மாவு மற்றும் சோளத் தவிடு ஆகியவற்றின் கலவையானது கெட்ட கொழுப்பை குறைக்க பெரும் பங்கு வகித்ததும் தெரியவந்தது.

உணவில் செய்யும் சிறிய மாற்றங்கள் கூட இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான எளிய மற்றும் ஆரோக்கியமான அணுகுமுறையை வழங்குகின்றன என்பதை இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. பொதுவாக கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உத்திகள் கடுமையான உணவு முறைகளை உள்ளடக்கியது. இருப்பினும், இந்த ஆய்வின்படி, ஆரோக்கியமான உடலுக்கு வழக்கமான மாவுகளை சோள மாவுகளை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறது.

Corn Flour

சோளத் தவிடு கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது, மேலும் கொலஸ்ட்ரால் நிர்வாகத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. சோள மாவு மற்றும் சோள மாவு கலவை முழு தானிய உணவுக்கு சிறந்த சுவையான மாற்றாக இருக்கும், மேலும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.

இந்த ஆராய்ச்சியானது, வழக்கமான மாவுக்கு மாற்றாக சோளத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு எளிய உணவுக்கு நுகர்வோர் மாறலாம் என்பதை பரிந்துரைக்கிறது.. ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்ட நம்பிக்கைக்குரிய முடிவுகள், கடுமையான உணவு மாற்றங்களைச் செய்யாமல் உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். எனினும் உங்கள் உணவு முறையில் மாற்றங்களை செய்யும் முன்பு மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

click me!